Monday, April 29, 2024
Home » ஆளுநர் செந்தில் தொண்டமானை பாராட்டிய பௌத்த மதகுருமார்கள்

ஆளுநர் செந்தில் தொண்டமானை பாராட்டிய பௌத்த மதகுருமார்கள்

by Prashahini
March 18, 2024 2:45 pm 0 comment

மல்வத்து மகாவிஹார அநுநாயக்க மற்றும் யக்கல விக்ரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு நேற்று (17) அம்பாறை, அரந்தலாவ சர்வதேச பௌத்த கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உள்ளிட்டோரும் 150 பௌத்த மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம தேரர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மூவின மக்களையும் மதித்து செயற்பட கூடியவர் எனவும், கடந்த காலங்களை விட தற்போது கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களுக்கும் ஒரே விதமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது எனவும், ஆளுநரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் இருப்பதாகவும், மூவின மக்கள் மத்தியிலும் ஆளுநருக்கு அதிக மரியாதை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இக்கருத்துகளை அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT