Thursday, May 9, 2024
Home » நாட்டின் தொல்பொருள் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்

நாட்டின் தொல்பொருள் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்

- அதற்காக புதிய சட்டம் விரைவில்

by Rizwan Segu Mohideen
March 4, 2024 5:54 pm 0 comment

நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

“பிக்கு கதிகாவத்” சட்டமூலத்தை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்க,

கடினமான சூழ்நிலையில் பராமரிக்கப்படும் புனிதத் தலங்களை பாதுகாப்பதற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதில் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தற்பொழுது சரிபார்க்கப்படுகின்றன. 2024 மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த புனிதத் தலங்களுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு முறையான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள சில விடயங்கல் தொடர்பில் அடிப்படை விதிகளை தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான கருத்துக்களும் ஆலோசனைகளும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

“பிக்கு கதிகாவத்” சட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முன்மொழிவுகளை மகா நாயக்க தேரர்களாலும் சங்க சபைகளாலும் வழங்குமாறு கேட்டுள்ளோம். இது எளிதான காரியம் அல்ல.

ஆனால் பிக்கு ஒழுக்கம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை இதன் மூலம் தீர்க்க முடியும் என்று பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள். அத்துடன் இலங்கையை தேரவாத சர்வதேச பௌத்த நிலையமாக மாற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நடைமுறைப்படுத்த அமைச்சு என்ற ரீதியில் நாம் தயாராக உள்ளோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT