Home » பாகிஸ்தான் பிரதமராக ஷெஹ்பாஸ் ஷரீப் மீண்டும் இன்று பதவிப்பிரமாணம்

பாகிஸ்தான் பிரதமராக ஷெஹ்பாஸ் ஷரீப் மீண்டும் இன்று பதவிப்பிரமாணம்

by Rizwan Segu Mohideen
March 4, 2024 10:16 am 0 comment

பாகிஸ்தான் பிரதமராக ஷெஹ்பாஸ் ஷரீப் இரண்டாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தால் நேற்று நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிராக தற்போது சிறை அனுபவிக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு எம்.பிக்கள் கோசம் எழுப்பினர்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஷெஹ்பாஸ் அதிகபட்சமாக 201 வாக்குகளை வென்றதோடு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இம்ரான் கான் ஆதரவாளர் ஒமர் அயூப் 92 வாக்குகளை வென்றார். இதில் வெற்றி பெறுவதற்கு அதிகபட்சம் 169 பெரும்பான்மை வாக்குகளை வென்றால் போதுமாக இருந்தது.

பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் பெரும்பான்மை இடங்களை வென்றபோதும் ஆட்சி அமைப்பதற்கு போதுமான ஆசனங்களை கைப்பற்ற தவறினர். இதனையடுத்து அந்தத் தேர்தலில் இரண்டாம் இடம்பெற்ற ஷெஹ்பாஸின் மூத்த சகோதரர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி அரசொன்றை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷெஹ்பாஸ் தனது இரண்டாவது தவணைக்கான இன்று (04) பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT