Thursday, May 9, 2024
Home » சமூக ஊடகங்களில் பெற்ற படங்களை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரிப்பு
வங்கிகளில் கடன் பெறும் பண மோசடி

சமூக ஊடகங்களில் பெற்ற படங்களை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரிப்பு

by gayan
February 17, 2024 11:00 am 0 comment

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி போலி தேசிய அடையாள அட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட 02 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து 28 போலி தேசிய அடையாள அட்டைகள், 32 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 03 கையடக்கத் தொலைபேசிகள், 05 போலி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள், 18 சிம் கார்ட்கள் மற்றும் கணினி ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சந்தேகநபர்கள், தனியார் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கும் போலித் தகவல்களை பயன்படுத்தி கடன் பெறுவதற்கும் போலி ஆவணங்களை தயாரித்தமையை கண்டுபிடித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்களை சந்தேகநபர்கள் ஏமாற்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்துள்ளனர். போலி தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற பிற ஆவணங்களை தயாரிக்க அவர்கள் சமூக ஊடகங்களிலிருந்து தகவல் மற்றும் படங்களை பெற்றுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT