Home » யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் வயம்ப பல்கலைக்கழகம் கைகோர்ப்பு
மாணவர்களை வலுவூட்ட

யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் வயம்ப பல்கலைக்கழகம் கைகோர்ப்பு

by mahesh
February 14, 2024 10:00 am 0 comment

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், வயம்ப பல்கலைக்கழகத்தின் காப்புறுதி மற்றும் விலை மதிப்பீடு திணைக்களம் ஆகியன புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு வயம்ப பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ் மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டு, உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

பட்டம் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது இந்த கைகோர்ப்பின் பிரதான இலக்காக அமைந்துள்ளதுடன், ஆயுள் காப்புறுதித் துறையில் பிரயோக அனுபவம் மற்றும் வெளிப்பாட்டை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கின்றது. இந்தப் பங்காண்மையினூடாக கல்விசார் உள்ளம்சங்களுடன் இணைந்த தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. நிபுணத்துவமான சூழலில் தமது கோட்பாட்டு ரீதியான அறிவை பிரயோகிக்கவும், உலகத்தரமான வாய்ப்புகள் வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT