Sunday, April 28, 2024
Home » மஸ்ஜிதுந் நபவியும், கல்விப் பணிகளும்

மஸ்ஜிதுந் நபவியும், கல்விப் பணிகளும்

by Rizwan Segu Mohideen
February 8, 2024 2:23 pm 0 comment

மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்ததாக சிறப்பிலும் அந்தஸ்திலும் மிக உயர்ந்தது மஸ்ஜிதுந் நபவியாகும். ஹிஜ்ரி முதலாம் ஆண்டு இஸ்லாமிய ஆட்சி மதினாவில் ஆரம்பமானதையடுத்து முஸ்லிம்களுக்கென்று தனித்துவமாக அமைக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல் இதுவாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலம் முதல் இன்று வரை மஸ்ஜிதுந் நபவி இத்துறையில் தனித்துவம் வகிக்கின்றது. பெரும் பெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை உருவாக்கி இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாபெரும் பங்களிப்பினை வழங்கி தனது சேவைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது மஸ்ஜிதுந் நபவி.

வணக்க வழிபாடுகளுக்கு அடுத்ததாக கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் மாபெரும் பங்கினை ஆற்றும் மஸ்ஜிதுந் நபவியானது பிரமாண்டமான பொது நூலகம் ஒன்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்நூலகமானது 1933 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய நஸ்ஸார் அபீத் அல்மதனி என்பவரின் ஆலோசனைக்கிணங்க மன்னர் அப்துல் அஸீஸ் ஆலுஸுஊத் அவர்களின் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் இதன் முதல் நிருவாக பொறுப்பாலராக யாஸீன் அல்கியாரி என்பவர் நியமிக்கப்பட்டார்.

மஸ்ஜிதுந் நபவி நூலகம் என்றழைக்கப்படும் இப்பொது நூலகத்தின் தற்போதய நிருவாகத் தலைவரான ரஷீத் முஸ்இத் அர்ரபீஈ என்பவர் இதைப்பற்றி கூறும் போது இந் நூலகமானது 744 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளதுடன், 172,548 இற்கும் அதிகமான நூல்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்றார்.

மேலும் இநநூலகமானது உலக முஸ்லிம்களுக்கென 24 மணித்தியாலமும் இயங்கி வருகிறது. நீண்ட நேர வாசிப்புக்கான பிரிவு, கணினிப் பிரிவு, அரியவகை நூல்களுக்கான பிரிவு, போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான பிரிவு, மொழிப் பிரிவு போன்ற பல பிரிவுகளாக இந்நூலகம் வகைப்படுத்தப்பட்டு தனது சேவைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

மேலும் மஸ்ஜிதுந் நபவி நூலகத்தின் கணினிப் பிரிவானது இந்நூலகத்தில் காணப்படும் 172,548 இற்கும் மேற்பட்ட நூல்களை Pdf வடிவிலும், ஒலி வடிவிலும் வடிவமைத்து தனது சேவையை வழங்கி வருவதுடன் பல உயர் நவீன சேவைகளையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக இதன் நிருவாக பொறுப்புதாரி ரஷீத் முஸ்இத் அர்ரபீஈ தெரிவித்தார்.

இக்கல்லூரியானது 2010 செப்டம்பர் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, ஆண் மாணவர்களுக்கான பிரிவு, பெண் மாணவிகளுக்கான பிரிவு என இருபாலாரும் கல்வி கற்கும் வகையில் இயங்கி வருகிறது.

ஷரீஆ, அல்குர்ஆன், ஹதீஸ், அகீதா, மொழி என ஐந்து பிரிவுகளைக் கொண்ட இக்கல்லூரியானது மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மது இப்னு சல்மான் ஆகியோரின் கண்காணிப்பிலும், சவுதி அரேபியாவின் முழு நிதியிலும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மஸ்ஜிதுந் நபவி கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 840 சவுதி ரியால்கள் கொடுப்பனவாக வழங்கப்படுவதுடன், இதில் நான்கு வருட பட்டப் படிப்பினை முடித்து வெளியேறும் மாணவர்கள் கலைமாணி பட்டம் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்கின்றனர்.

இக்கல்லூரியில் சேர்வதற்கான நிபந்தனைகளாக :-

1. ஐந்து வருடங்களுக்குட்பட்ட க.பொ.த உயர் தரப் பரீட்சைச் சான்றிதல்.
2. குறைந்த பட்சம் அல்குர்ஆனில் 5 ஜுஷ்களை மனனம் செய்திருத்தல்.
3. சவுதி அரேபியா நாட்டை சேர்ந்தவர் அல்லது சவுதி அரேபியாவில் வசிக்கக்கூடிய ஒருவராக இருத்தல் போன்றவை காணப்படுகின்றன.

இம்மாபெரும் சேவைகளுக்காக பெரும் நிதியுதவிகளையும், பங்களிப்புகளையும் செய்து வரும் சவுதி நாட்டு மன்னரான சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசரான முஹம்மத் இப்னு சல்மான் ஆகியோரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கலாநிதி இஸ்மாயில் மதனி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT