Sunday, April 28, 2024
Home » அம்பாறை மாவட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கான பயிற்சிப் பட்டறை

அம்பாறை மாவட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கான பயிற்சிப் பட்டறை

by Gayan Abeykoon
February 1, 2024 9:21 am 0 comment

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘Youth Media Project’ வேலைத்திட்டம் கப்ஸோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் காரைதீவு லேடி லங்கா வரவேற்பு மண்டபத்தில் அண்மையில் ஆரம்பமானது.

GCERF, HELVETAS நிதியுதவியுடன் கப்ஸோ நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது இடம்பெற்றுவருகின்றது.

இவ்வேலைத்திட்டமான அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வலர்களை கொண்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வேலைத்திட்டமானது ஒரு வருட காலத்தில் இடம்பெறவுள்ளது. இதில் முதலாவது விரிவுரையை ஊடகவியலாளர் ரிப்தி அலி வழங்கியிருந்தார்.

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT