Saturday, April 27, 2024
Home » பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறை

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறை

- அவரது வெளி விவகார அமைச்சருக்கும் அதே தண்டனை

by Rizwan Segu Mohideen
January 30, 2024 4:14 pm 0 comment

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரச இரகசியங்களை கசிய விட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கிற்கு அமைய குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான அவரது அமைச்சரவையின் வெளி விவகார அமைச்சரான அமைச்சர் ஷா மெஹமூத் குரோஷியிற்கும் இவ்வழக்கில் 10 வருட சிறை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கில் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய போதிலும் ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு அமைய அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் தூதுவர் ஒருவர் இரகசியமாக அனுப்பிய கம்பிவடத் தகவலை, பிரதமர் என்ற முறையில் அந்த இரகசியத்தைப் பாதுக்காக்காமல் பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக இம்ரான் கான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2023 ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, அரசு இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இம்ரான் கான், அரசியல் காரணங்களுக்காக தம் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றார்.

பிரதமர் பதவியில் இருந்த இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதில் அவர் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச இரகசிய வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை

இம்ரானுக்கு பிணை மறுப்பு

இம்ரான் கானுக்கு 3 வருட சிறை; 5 வருட அரசியல் தடை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT