Sunday, April 28, 2024
Home » தேசிய ரின்மீன் தொழில்களை பாதுகாக்க பூரண ஒத்துழைப்பு

தேசிய ரின்மீன் தொழில்களை பாதுகாக்க பூரண ஒத்துழைப்பு

by damith
January 30, 2024 6:15 am 0 comment

உள்ளூர் தேசிய ரின் மீன் உற்பத்தித் துறையைப் பாதுகாப்பதற்காக சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சிலாபம், மஹவெவ பகுதியிலுள்ள PRF Sea Food தனியார் நிறுவனத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்குமேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளிலிருந்து ரின் மீன்கள் இறக்குமதி செய்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரின்மீன் உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக் கை எடுக்கப்பட்டுவருகிறது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ரின்மீன்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரின்மீன்க ளின் தரம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப் படும் மீன்களின் தரத்திற்கு நிகராக இல்லை என்பது பல்வேறு தரப்பின் கருத்தாகும். இக்க ருத்தில் உண்மை இல்லையென நிரூபிப்பது தேசிய ரின்மீன் உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும். இலங்கை தரக் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் அனுமதிக்கப்பட்ட 18 உள்ளூர் ரின்மீன் தொழி ற்சாலைகள் நாட்டிலுள்ளன. அனுமதி வழங்கப்படாத தொழிற்சாலைகளும் இருப்பதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளூர் ரின்மீன் உற்பத்தித் தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வது அவசியம். இவ்வா று செய்தால், அறுவடை செய்யப்படும் மீன்களை இத்தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய முடியும். இதனால், உள்ளூர் மீனவர்கள் நன்மையடைவர் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT