Monday, April 29, 2024
Home » நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

- சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்கள் இணைப்பு

by Rizwan Segu Mohideen
January 24, 2024 5:44 pm 0 comment

– சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

அனைவரினதும் கவனத்திற்கு உள்ளான நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் (Online Safety Bill) 2ஆம் வாசிப்பு மீதான மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்றையதினமும் (23) இன்றைய தினமும் (24) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் இன்று (24) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் முடிவடைந்ததும் பி.ப 5.00 மணிக்கு எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்லவினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டது.

இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்கும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. அந்த வகையில் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர், குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியினால் சட்டமூலத்தின் 36ஆவது பிரிவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தத்துக்கு வாக்கெடுப்புக் கோரப்பட்டது.

இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த திருத்தத்திற்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டு 41 மேலதிக வாக்குகளால் இந்தத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

வாக்களிப்பு விபரம்

Online-Safety-Bill-Gazette-391-2023_T Online-Safety-Bill-Gazette-391-2023_T

நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் சாதகமாக பாவிப்பதற்கு முயற்சி

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்: பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது சர்ச்சைக்குரிய நிகழ்நிலை சட்டமூலம்

ஜனவரி 23, 24: நிகழ்நிலை காப்புச் சட்டமூல விவாதத்தை ஒத்தி வையுங்கள்!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT