Monday, May 6, 2024
Home » யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 71

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 71

by damith
January 15, 2024 11:20 am 0 comment

தவறான கண்ணோட்டம் கொண்ட ஒருவன், சாதாரண துன்பத்தைக் கூட, தன் தவறான மதிப்பீட்டால், மிகப் பெரிய துன்பமாகக் கருதி கவலைப்படுகிறான். கவலை வளர்த்துக் கொள்கிறான். சின்னக் குறைபாடு அல்லது சின்னளவில் உடல் நல மின்மை அல்லது சிறிய கடுகு அளவு பாதகமான சூழ்நிலை வந்தாலும் மலையளவு நினைத்து பயம் கொள்கிறான். தேவையின்றி கலங்குகிறான். மனவலிமையை பொறுத்தே சூழ்நிலைகளின் தாக்கம் அமையும். காய்ந்த விறகுக் கட்டையில் நெருப்பு எளிதில் பற்றிவிடும். ஆனால் ஈரமான விறகுக் கட்டையில் நெருப்பு அவ்வளவு எளிதாகப் பற்றாது.

பலவீனனை தாக்கும் அளவிற்கு நோய் பலமுள்ளவனை தாக்காது. வறண்ட நிலம் நீரை உறிஞ்சும் அளவிற்கு ஈரமான நிலம் உறிஞ்சுவதில்லை. மெல்லிய, வெள்ளை துணியில் சாயம் ஏறும் அளவிற்கு கடினமான அழுக்கு துணியில் ஏறுவதில்லை. அதே போல் பலவீனமானவன் பாதகமான சூழ்நிலையை கூட தாங்கிக்கொள்ளும்மனவலிமை இன்மையில் கவலைப்படுகிறான் அல்லது துன்பப்படுகிறான்.

உலகத்தில் வெற்றி, அழகு, சுகம், அமைதி பெற விரும்புவன் தனக்கு எதிரான பாதகமான சூழ்நிலையினை. சரியான கண்ணோட்டத்துடன் நோக்கி எதிர் கொண்டு, தமக்கு சாதகமான சூழ்நிலையாக மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்கு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உலகின் அனைத்து பொருட்களும். வாழ்வில் தான் சந்திக்கும் அனைத்து சூழ்நிலைகளையும் கண்டு கலங்கி பயந்து சுகத்தையும் அமைதியையும் இழந்துவிடுவான்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT