Home » ஹோல்புறூக் விஞ்ஞானக் கல்லூரி மாணவர்கள் கரம் போட்டியில் சாதனை

ஹோல்புறூக் விஞ்ஞானக் கல்லூரி மாணவர்கள் கரம் போட்டியில் சாதனை

by mahesh
January 6, 2024 7:00 am 0 comment

மலையகப் பகுதியில் கரம் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் மெரினாஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த திறந்த கரம் போட்டி மெராயா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் 50 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியன. தனிநபர் போட்டியில் எஸ். டிலான் முதலாமிடத்தையும், பி. கபிலாஸ் இரண்டாம் பெற்றனர்.

இரட்டையர் போட்டியில் பங்குபற்றிய ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி மாணவர்களான புஷ்பராஜ் துவாரக்ஷான், சிவகுமார் பிரகதீஸ் ஆகிய இருவரும் இணைந்து மிகவும் சிறப்பாக விளையாடி அனைத்துச் சுற்றிலும் வெற்றிப்பெற்று, இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி பார்வையாளர்களின் அமோக வரவேற்புடன் 2023 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர். இந்நிகழ்வில் மெராயா பாடசாலை அதிபர் என். கிருஷ்ணராஜ் கலந்து கொண்டார். இப்போட்டியை மிகவும் சிறப்பான முறையில் வீ.விஷ்வநாத், யூ.கிருஷ்ணா, ரீ. கிருஷ்ணகுமார், எஸ். மினோசன் ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர்.

எம்.ஐ.எம்.அஸ்ஹர் (மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT