Home » கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மூவின பாரம்பரிய பண்டிகை நல்லிணக்கவிழா

கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மூவின பாரம்பரிய பண்டிகை நல்லிணக்கவிழா

by Gayan Abeykoon
May 1, 2024 8:50 am 0 comment

ிழக்கு இளைஞர்கள் அமைப்பானது றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பு மற்றும் MYOWN நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இனநல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாரம்பரிய கலைநிகழ்வு சம்மாந்துறை பொதுமைதானத்தில் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானீஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர், மயோன் நிறுவனத்தின் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா கலந்து சிறப்பித்தார்.

கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.தெளபீக், சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூஸா, றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பின் செயலாளரான திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர், சம்மாந்துறை கோரைக்கார் தமிழ் மகாவித்தியாலய அதிபர் எஸ். இளங்கோபன், கவிதாயினி டொக்டர் ஜெலீலா முஸம்மில் மற்றும் கலை மன்றங்களின் தலைவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்…

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT