Monday, April 29, 2024
Home » குறைப்பிரசவ தினத்தில் சிசு பராமரிப்பில் முன்னோடியாக திகழும் நைன்வெல்ஸ்

குறைப்பிரசவ தினத்தில் சிசு பராமரிப்பில் முன்னோடியாக திகழும் நைன்வெல்ஸ்

by mahesh
January 6, 2024 7:09 am 0 comment

சிசு, குழந்தை மற்றும் குடும்ப சுகாதாரப் பராமரிப்பு என்று வரும் போது நைன்வெல்ஸ் வைத்தியசாலை இத்துறையில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமின்றி முன்னோடியாகத் திகழ்ந்து வருவதுடன், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பதாகவே பிரசவமாகின்ற சிசுக்கள் தொடர்பான மருத்துவப் பராமரிப்பில் வெற்றிகரமான செயல்பாடுகளை தொடர்ச்சியாக நிரூபித்து வந்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பதாகவே பிரசவமாகின்ற 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆண்டுதோறும் பராமரித்து, இலங்கையில் சிசுப் பராமரிப்பின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் தனது பயணத்தை பிரதிபலிக்கும் வகையில், உலக குறைப்பிரசவ தினத்தை இவ்வைத்தியசாலை கொண்டாடியுள்ளது.

குடும்பத்தை மையமாகக் கொண்ட சிசுப் பராமரிப்பு, விஞ்ஞானபூர்வமான மற்றும் ஆதாரம் சார்ந்த அணுகுமுறை, அனைவரதும் கண்ணியத்திற்கு மதிப்பளித்தல், கௌரவம் குன்றாத சூழலைத் தோற்றுவித்தல், குடும்பத்தினருடன் அனைத்து தகவல் விபரங்களையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளல் ஆகியவற்றின் மீது நைன்வெல்ஸ் வைத்தியசாலை காண்பிக்கும் அர்ப்பணிப்பே அதன் வெற்றியாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT