Sunday, April 28, 2024
Home » இவ்வருடம் 1,000 பேருக்கு உம்ரா செய்ய இலவச வாய்ப்பு

இவ்வருடம் 1,000 பேருக்கு உம்ரா செய்ய இலவச வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
January 6, 2024 4:31 pm 0 comment

ஒவ்வொரு வருடமும் சவூதி அரசாங்கம் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை முற்றிலும் இலவசமாக நிறைவேற்றுவதற்கு நூற்றுக்கணக்கான மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி வருகின்றது.

அந்த வகையில் இவ்வருடமும் பல்வேறு உலக நாடுகளையும் சேர்ந்த சுமார் 1,000 பேருக்கு உம்ரா கடமையை இலவசமாக நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்குவதற்கு சவூதி அரேபிய மன்னர் சல்மான் விருப்பம் தெரிவித்துள்ளதாக சவூதி பிரஸ் ஏஜென்ஸி செய்தி வெளியிட்டுள்ளது.

உலக மக்களுக்கு பாரிய சேவைகளை தொடர்ந்து முன்னின்று சவூதி அரேபியா செய்து வரும் இந்த மகத்தான சேவை பாராட்டுக்குரியது என உலமாக்கள் தெரிவிக்கின்றனர்.

அபூ அரீஜ் பாஹிர் 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT