இலங்கை பாடசாலைகள் கைப்பந்தாட்ட சம்மேளனம் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்திய 12 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்குமான போட்டிகள் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும், மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான உள்ளக அரங்கிலும் இடம்பெற்றன.
இதில் கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் இடம்பெற்ற 6 போட்டிகளில் வெற்றியையும், இரண்டு போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றி தோல்வி இன்றியும் நிறைவு செய்தனர்.
ரிதிதென்ன இக்ரா வித்தியாலயம், வவுணத்தீவு பரமேஸ்வரா வித்தியாலயம், பூனொச்சிமுனை இக்ரா வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி, கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி, நாவற்காடு நாமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் அறிமுக போட்டிகளில் பங்கேற்றன.
மாளிகைக்காடு குறூப் நிருபர்