Sunday, April 28, 2024
Home » குறிஞ்சாக்ேகணி படகு விபத்தில் மக்கள் பலியாகி 4 வருடங்கள் பூர்த்தி

குறிஞ்சாக்ேகணி படகு விபத்தில் மக்கள் பலியாகி 4 வருடங்கள் பூர்த்தி

by sachintha
November 23, 2023 6:35 am 0 comment

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட குறிஞ்சாக்கேணி பாலம் சுமார் 50 வருடங்கள் பழைமையானது. இப்பாலம் 15 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.
கிண்ணியாவின் மத்தியில் அமைந்துள்ள இப்பாலம் கிண்ணியா நகர சபையையும், கிண்ணியா பிரதேச சபையையும் பிரிக்கின்ற எல்லையாகக் காணப்படுகின்றது.

இப்பாலத்தினூடாக நாளாந்தம் 2000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் பிரயாணம் செய்கின்றனர். பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், வியாபாரிகள், நோயாளர்கள் எனப் பலர் இப்பாலத்தையே பிரதான வீதியாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இப்பாலம் அபாயநிலையில் காணப்படுகின்றது. இந்த ஆற்றில் இரு வருடங்களுக்கு முன்னர் (2021 நவம்பர் 23) இடம்பெற்ற படகு விபத்தில் பலர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்பாலத்தினை மீனவர்கள் இறால் பிடிக்கும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இப்பாலம் எப்போது அமைக்கப்படும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏ.ஆர்.எம். றிபாஸ் (கிண்ணியா நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT