Sunday, April 28, 2024
Home » அகில இலங்கை கொழுந்து நாட்டியப் போட்டி; வட்டுக்ேகாட்டை இந்துக் கல்லூரி சாதனை

அகில இலங்கை கொழுந்து நாட்டியப் போட்டி; வட்டுக்ேகாட்டை இந்துக் கல்லூரி சாதனை

by mahesh
November 22, 2023 9:00 am 0 comment

அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட பரத நாட்டியப் போட்டி_ 2023 இல் மாணவர்கள் எண்ணிக்ைக 1001 இற்கு மேற்பட்ட பாடசாலைகளுக்குள் யா/வட்டுக்ேகாட்டை இந்துக்கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.

சிரேஷ்ட பிரிவில் குழு 01 பெண்களுக்கான தேயிலைக் கொழுந்து நடனத்தில் வட்டு. இந்துக்கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். அம்மாணவர்களுக்கும் மாணவர்களை வழிப்படுத்தி பல வகையிலும் ஊக்கமளித்து துணை புரிந்த நடன ஆசிரியர் திருமதி சகிலா சுதாகரன், சங்கீத ஆசிரியர் திருமதி நித்தியா தவக்குமார், விஞ்ஞான ஆசிரியர் சின்னப்பு சதீஸ், பக்கவாத்தியக் கலைஞர் லோ.நிமலன் மற்றும் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கான அனைத்து செலவினங்களுக்கும் நிதி உதவிகளை கலாநிதி இ.நித்தியானந்தன் (Ratnam Foundation, U.K) வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT