Sunday, April 28, 2024
Home » தேர்தலில் சமயங்களில் சமூக ஊடகங்களின் முக்கிய பங்கு

தேர்தலில் சமயங்களில் சமூக ஊடகங்களின் முக்கிய பங்கு

- பிழையான தகவலினால் உருவாக்கக்கூடிய தர்மசங்கடமான சூழ்நிலையினைச் சமாளித்தல்

by Rizwan Segu Mohideen
October 31, 2023 11:34 am 0 comment

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தொடர்ச்சியான வேகமான வளர்ச்சியின் விளைவாக சமூக ஊடக தளங்கள் எமது கூட்டு Digital உரையாடலின் பொதுமையமாக மாறிவிட்டனஇத்தளங்கள் அரசியல் துறையில், குறிப்பாக தேர்தல்களின் போது நாம் எவ்வாறு தொடர்பு கொள்கின்றோம் எனும் விடையத்தில் செல்வாக்கு மிக்க வீரர்களாக உருவெடுத்து புரட்சியினை ஏற்படுத்தியுள்ளன. நமது ஜனநாயக செயல்முறைகளில் சமூக ஊடகங்களின் ஆழமான தாக்கத்தை நான் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்திருக்கின்றேன், மேலும் ஒரு முக்கியமான பிரச்சனையினை   எதிர்கொள்ள வேண்டிய தருணம் இதுவாக்கும்: பிழையான தகவல்களைப்  பரப்புவதில் சமூக ஊடகங்களின் பங்கு மற்றும் வளர்ந்து வரும் இச்சவாலை நாம் எவ்வாறு எதிர்கொள்வது.

தகவல் புரட்சி: இரு முனைகளைக் கொண்ட வாள்போன்றது. 

சமூக ஊடகங்களின் வளர்ச்சியானது நிச்சயமாகவே அபரிமிதமானது தான்.    இது குரல் இல்லாத மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றது.    முன் ஒருபோதும் இல்லாத வகையினில் அரசியல் சார்ந்த உரையாடகளில்  ஈடுபட குடிமக்களுக்கு வாய்ப்பினை அளித்துள்ளது. ஆம், தகவல்கள் தொடர்பான ஜனநாயக உரிமையினை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தினை மக்களுக்கு வழங்கியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையினில், அது பலதரப்பட்ட குரல்களின் ஏக்கங்களினை வெளிக்கொணரவும், வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்களின் பங்கேற்பினை மேம்படுத்தவும் வாய்ப்பினை வழங்கியுள்ளதுஎன்றபோதிலும், எந்தவொரு சக்திவாய்ந்த ஊடகங்களுக்கும் இருக்கக்கூடிய அல்லது முகம்கொடுக்க வேண்டிய சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு சமூக ஊடகமும் விதிவிலக்கல்ல.

உண்மைக்குப் புறம்பான பிழையான தகவல்களை பரப்புதலானது டிஜிட்டல் யுகத்தினில் ஒரு பாரிய வலிமையான சவாலாக உருவெடுத்துள்ளது. தேர்தல் சமயங்களின் போது, இவ்வச்சுறுத்தலானது அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது வாக்காளர்களின் நடத்தை மற்றும் பொதுக்கருதுகளினைப் பாதிக்கக்கூடிய மற்றும் நமது ஜனநாயகக் கட்டமைப்பினை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்தும் வகையினில் பொய்கள், வதந்திகள் மற்றும் சரிபார்க்கப்படாத உரிமைகோரல்கள் போன்றன காட்டுத்தீயினைப் போன்று பெரும்பாலும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பரப்பப்படுகின்றது.

தவறான தகவல்களினை இனம்கண்டறிந்து எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பாக   சமூக ஊடகத்தளங்களானது முக்கிய பங்கினை வகிக்கின்றன. அவர்கள் தகவல்தொடர்புகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமல்லாது, அது தொடர்பான பாதுகாவலரார்களும் தான். எனவே, அவர்களின் தளங்களில் பரப்பப்படும் உள்ளடக்கமானது மிகத்துல்லியமானதும்நியாயமானதும்  மற்றும் நம்பகத்தன்மை கொண்டது  என்பதனை  உறுதிப்படுத்துவதானது  அவர்களின் முக்கிய  பொறுப்பாகும்

சமூக வழிகாட்டுதல்களின் பங்களிப்பு

சமூக ஊடகத்தளங்களில் பரப்பப்படக்கூடிய பிழையான தகவல்களைச் சமாளிக்கவே சமூக வழிகாட்டுதல்களானது உருவாக்கப்பட்டுள்ளன. இது பாவனையாளர்களின் நடத்தை தொடர்பான நிர்வகிப்பு விதிகள் மற்றும் தரநிலைகள் என்பனவற்றின் தொகுப்பாகும். இவ்வழிகாட்டுதல்கள் தகவல் பரவலின் உண்மைத்தன்மையினைப் பேணுவது தொடர்பாக பிரதான பங்காற்றுகின்றது. சமூக வழிகாட்டுதல்களானது விதிகளை விடவும் வலிமைவாய்ந்தவையாகும்; அவைகள் பாதுகாப்பான மற்றும் கெளரவமான ஆன்லைன் சுழலினை வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அவை பொறுப்பான உள்ளடக்கங்களினை உருவாக்குவதற்கான கட்டமைப்பினை வழங்குகின்றன, அதோடு கூட கருத்துச் சுதந்திரம் மற்றும் பொறுப்பு மிக்க நடத்தை ஆகியவற்றிற்கு  இடையிலான  சமநிலையை  ஏற்படுத்துகின்றன.

TikTok போன்ற உலகளாவிய தளமானது, குறிப்பாக தேர்தல்களின் போது, உண்மையான ​​தகவல் தெரிவிப்பின் ஒருமைப்பாட்டினைப் பேணுவது தொடர்பான தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களுடைய சமூக வழிகாட்டுதல்கள், பாவனையாளர் நடத்தையை நிர்வகிக்கும் விதிகளின் தொகுப்பு, பொய்களைப் பரப்ப முயல்பவர்கள் ஏதேனும் ஓர் தளத்தை     முடக்காமல் இருப்பதனை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வழிகாட்டுதல்கள் ஆனது ஒழுங்கு விதிகளின் தொகுப்பினைவிடவும் அதிகமானதாகும். – அவை பாதுகாப்பான, பொறுப்புணர்ச்சி மிக்க மற்றும் கனத்திற்குரிய ஆன்லைன் சமூகத்தினை வளர்ப்பதற்கான கடப்பாடாகும்சுதந்திரமான எண்ணங்களின் வெளிப்பாடு மற்றும் பொறுப்புணர்ச்சி மிக்க நடத்தை இவை இரண்டிற்கும் இடையிலான ஒரு நுட்பமான இடைவெளி கொண்ட சமநிலைக்  கட்டமைப்பினை அவை வழங்குகின்றன.

நியாயமான தேர்தலினை  உறுதி செய்தல்.

தேர்தல்களின் போது, ​​இவ்வழிகாட்டுதல்களின் பங்களிப்பானது மிக முக்கியமானதாகும்உண்மைக்குப் பிறம்பான தகவல், பிரிவினைகளை உண்டாக்கும்  உள்ளடக்கம் மற்றும் வெளிவாரியான  குறுக்கீடுகள் பரவுவதற்கு எதிராக அவை செயல்படுகின்றன. இவ்வழிகாட்டுதல்களை விடாமுயற்சியுடன் செயல்படுத்தும் தளங்கள், தேர்தல்  செயல்ப்பாடானது  நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், எவ்வித தந்திரோபாயங்களும் அற்றதாயும்  இருப்பதனை  உறுதி செய்கின்றது

எவராயினும், பொறுப்பானது சமூகத் தளங்களோடு மட்டும் நின்றுவிடாதுஇதில்  பாவனையாளர்களும் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்பொறுப்புவாய்ந்த  உள்ளடக்கங்களினை  உருவாக்குவதன் முக்கியத்துவம்  மற்றும்  பிழையான  தகவல்களைப் பரப்புவதனால்  ஏற்படக்கூடிய  விளைவுகளினைக்  குறித்து பாவனையாளர்களுக்குக்  கற்பிப்பது மிகவும் அவசியமாகும்இவற்றில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு தொடர்பான முன்னெடுப்புக்கள்  என்பன பிழையான  தகவல்களைத்   தணிக்கும்  உத்தியின் முக்கிய  கூறுகளாகும்.

ஒருங்கிணைந்த முயற்சி.

ஆம் முடிவாகக்கூறினால், தேர்தல்களின் போது சமூக ஊடகங்களில் பிழையான  தகவல்களை  எதிர்கொள்வதானது ஒரு கூட்டு முயற்சியாகும். இதற்கு தளங்களின் விழிப்புணர்ச்சி, பாவனையாளர்களின் செயலூக்கமான பங்கேற்பு, கொள்கை வகுப்பாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் சிவில் சமூகத்தின் ஆய்வு போன்றவை   அவசியமாகும்குடிமக்களாகிய நாம் சமூக ஊடகங்களினைப் பகுத்தறிவுடன் அணுக வேண்டும், தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு முன்பு  அதனைச் சரிபார்க்க வேண்டும்.

பிழையான  தகவல் ஆனது ஜனநாயக  செயல்பாட்டிற்கு  நிச்சயம்  ஆபத்தை ஏற்படுத்தும். எமது ஜனநாயகத்தைப் பாதுகாக்க, சமூக ஊடகத்தளங்கள் வலுவான சமூக வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் சூழலை நாம் வளர்க்க வேண்டும்; பாவனையாளர்கள் பொறுப்பான உள்ளடக்கத்தை உருவாக்குவது தொடர்பாக அறிந்திருக்கின்றனர் மேலும் உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் கொள்கைகள்  எமது டிஜிட்டல் உரையாடலுக்கு வழிகாட்டுகின்றன.

இலங்கையிலும் மற்றைய நாடுகளிலும் எதிர்காலத்தினில் தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கும்  இத்தருணத்தினில், சமூக ஊடகங்களின் சக்தியை எமது சமூகம் மற்றும் எமது ஜனநாயகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த முடியும் என்பதனை  எப்போதும் நினைவினில் கொள்வோம். எம்  ஜனநாயகம்  மற்றும்  கட்டமைக்கப்பட்ட  கொள்கைகளை நிலைநிறுத்தி, இச்சக்திவாய்ந்த  கருவியானது   நன்மைக்கான சக்தியாக இருப்பதனை  உறுதி செய்வது என்பது எமது கைகளில்  உள்ளது.

(எழுத்தாளர் இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில் கூட்டமைப்பின் (FITIS) தலைவர் ஆவார்)
எழுத்தாக்கம்: இந்திக டி சொய்சா.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT