Monday, April 29, 2024
Home » சம்பியனானது கொழும்பு சாஹிரா

சம்பியனானது கொழும்பு சாஹிரா

by damith
October 24, 2023 10:06 am 0 comment

கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் தலைவர்களின் சங்கம் நடத்திய நோலிமிட் சாஹிரா சுப்பர் 16 கால்பந்து போட்டியில் அலிதியா சர்வதேச பாடசாலையை வீழ்த்தி சாஹிரா கல்லூரி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கொழும்பு, குதிரைப்பந்தய மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்ற இந்த தொடரில் 16 பாடசாலை அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் கொழும்பு சாஹிரா 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் பிரதான அனுசரணையாளர் நோலிமிட் சந்தைப்படுத்தல் முகாமையாளர் பவாஸ் மொஹமட் வெற்றி பெற்ற அணித் தலைவர் முபத்தல் சியார்ட் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு சம்பியன் கிண்ணம், ரொக்கப் பரிசு மற்றும் தங்கப் பதக்கங்களை வழங்கினார்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT