Tuesday, April 30, 2024
Home » “டெக்னோ 2023” தேசிய பொறியியல் தொழில்நுட்ப கண்காட்சி BMICH இல்

“டெக்னோ 2023” தேசிய பொறியியல் தொழில்நுட்ப கண்காட்சி BMICH இல்

by damith
October 24, 2023 8:56 am 0 comment

“டெக்னோ 2023” தேசிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விமானியும் மற்றும் தொழில்முறை பொறியியலாளருமான விமானப்படை தளபதி தனது ஆரம்ப உரையில், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பாதுகாப்பு படையின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு உதவுகின்றன என்பதை விளக்கினார்.

இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் (IESL) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியின் மூலம் எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க வழிவகுப்பதோடு இந்த ஆண்டு “டெக்னோ 2023″ கண்காட்சியின் கருப்பொருள் ”பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்” என்பதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT