Friday, May 10, 2024
Home » சட்டவிரோதமாக 11,460 கி.கி. பீடி இலைகள் இறக்குமதி

சட்டவிரோதமாக 11,460 கி.கி. பீடி இலைகள் இறக்குமதி

- ரூ. 700 மில்லியன் வரி வருமான இழப்புக்கு வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
October 17, 2023 4:42 pm 0 comment

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 11,460 கிலோ பீடி இலைகள் கொண்ட கொள்கலன்களை சுங்கத்துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கொள்கலன்களை பார்வையிட பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொத்தமல்லி விதைகளை இறக்குமதி செய்வதாகக் கூறி இரு 20 அடி கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 11,460 கிலோ பீடி இலைகளை கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி சுங்க மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த பீடி இலைகள் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூ. 700 மில்லியனுக்கு அதிக வரி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத பீடி இலை இறக்குமதியில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் டி.டபிள்யூ.கே. விஜேதுங்கவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT