Sunday, April 28, 2024
Home » Zero Chance சித்திர மற்றும் கட்டுரைப் போட்டி

Zero Chance சித்திர மற்றும் கட்டுரைப் போட்டி

by mahesh
October 4, 2023 9:00 am 0 comment

அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சுஇணைந்து ஒழுங்குசெய்த Zero Chance (ZR chance)பாடசாலைகளுக்கு இடையிலான சித்திர மற்றும் கட்டுரைப்போட்டியின் வெற்றியாளர்களைப் பாராட்டும் வைபவம் கடந்ததினம் இலங்கை மன்றக் கல்லூரியில் சிறப்பாகநடந்தேறியது. அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகமேற்கொள்ளப்படும் கடல்வழி புலம்பெயர்வு குறித்துவிழிப்புணர்வூட்டுவதும் சட்ட விரோதமாக படகுகள் மூலம்அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க முயற்சிக்கும் வீண்முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்துவதும், இப்போட்டித்தொடரை ஒழுங்குபடுத்துவதன் முக்கிய நோக்கமாகஅமைந்தது.

அண்மையில் இடம்பெற்ற இப் போட்டியில், 15 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பாடசாலைகளைப்பிரதிநிதித்துவப்படுத்தி ஏறத்தாழ 1800 மாணவமாணவியர்கள் பங்குபற்றினார்கள். தரம் 9 முதல் தரம் 11 வரையிலும், தரம் 12 முதல் தரம் 13 வரையிலுமான இரு வயதுப் பிரிவுகளின் கீழ் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ‘சட்டவிரோத கடல்வழிபுலம்பெயர்வினைத் தவிர்ப்போம்’ எனும் தலைப்பினைமையமாகக் கொண்டு, மாணவ- மாணவியர்களிடையே இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT