Home » நேபாள அணி உலக சாதனை: T20 போட்டியில் 314 ஓட்டங்கள்; 273 ஓட்டங்களால் வெற்றி

நேபாள அணி உலக சாதனை: T20 போட்டியில் 314 ஓட்டங்கள்; 273 ஓட்டங்களால் வெற்றி

- குறைந்த பந்துகளில் அரைச்சதம் மற்றும் சதம் உள்ளிட்ட பல சாதனைகள்

by Rizwan Segu Mohideen
September 27, 2023 11:07 am 0 comment

சீனாவில் இடம்பெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுடன் இணைந்தவாறு, ஹாங்சோவில் இடம்பெற்ற மங்கோலியாவுக்கு எதிரான ஆடவர் ரி20 கிரிக்கெட் நேபாள வீரர்கள் பல சாதனைகளை முறியடித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரர்களில் 314 ஓட்டங்களை பெற்ற அவர்கள், 273 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களால் முறியடிக்கப்பட்ட சில முக்கிய சாதனைகள் வருமாறு:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் 3 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்கள் எடுத்தது முதல் முறையாகும். இதற்கு முன் 2019 இல் அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் அடித்த 278 ஓட்டங்களும், துருக்கிக்கு எதிராக 2019 இல் செக் குடியரசும் பெற்ற 278 ஓட்டங்களும் இதுவரை சாதனையாக இருந்தது.

நேபாள வீரர் குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இது ரி20 போட்டிகளில் அதிவேகமாக உள்ளது . இதற்கு முன் டேவிட் மில்லர், ரோஹித் சர்மா, செக் குடியரசின் சுதேஷ் விக்ரமசேகர ஆகியோர் 35 பந்துகளில் சதம் பெற்றமையே சாதனையாக இருந்தது.

நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். ஐரியின் இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள் உள்ளடங்குகின்றன. யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், ஹஸ்ரதுல்லா ஜாசாய் ஆகியோர் இதற்கு முன்னர் 12 பந்துகளின் அரைச்தசம் கடந்திருந்தனர். அந்த வகையில் அனைத்து வகை ரி20களிலும் இது வேகமான அரைச்சதம் ஆகும். யுவராஜின் ஒரு அரைச்சதம் சர்வதேச ரி20 இல் பெற்றதாகும்.

மங்கோலியாவுக்கு எதிராக நேபாள அணி 273 ஓட்டங்களால் வெற்றி பெற்றமையானது, அனைத்து வகை ரி20 போட்டிகளிலும் ஓட்டங்களின் அடிப்படையில் இதுவே அதிகபட்ச ஓட்ட வெற்றியாகும். 2019 இல் துருக்கிக்கு எதிராக செக் குடியரசு 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதே இதற்கு முந்தைய மிகப்பெரிய வித்தியாசமாகும்.

10 பந்துகளில் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஐரியின் ஸ்ட்ரைக் ரேட் 520 ஆக இருந்தது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட பந்துகளில் ரி20 போட்டிகளில் ஒரு வீரர் 500 இற்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஓட்டம் பெற்றது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்னர், 2016 சிம்பாப்வேயின் உள்நாட்டு ரி20 போட்டியில் 10 பந்துகளில் மல்கம் வாலரின் ஸ்ட்ரைக் ரேட் 430 ஓட்டங்களாக அமைந்தது.

இந்தப் போட்டியில் நேபாள வீரர்கள் அடித்த சிக்ஸர்கள் 26 ஆகும். இது அணி சர்வதேச ரி20 அரங்கில் பெற்ற அதிக சிக்ஸர்கள் ஆகும். இதற்கு முன்னர் 22 சிக்ஸர்களாகும். 2019 இல் தெஹ்ராதூனில் அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியும், இவ்வருட ஆரம்பத்தில் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகளும் அடித்திருந்தன. 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் காபுல் ஸ்வானனுக்கு எதிராக பால்க் லெஜண்ட் 23 சிக்ஸர்களை அடித்து அதனை முறியடித்திருந்தது.

Nepal  (20 ovs maximum)
BATTING R B 4s 6s SR
c Altankhuyag b Jamyansuren 19 23 2 0 82.60
c †Otgonbayar b Erdenebulgan 16 17 2 0 94.11
not out 137 50 8 12 274.00
c †Otgonbayar b Altankhuyag 61 27 2 6 225.92
not out 52 10 0 8 520.00
Extras (b 2, nb 7, w 20) 29
TOTAL 20 Ov (RR: 15.70) 314/3
Fall of wickets: 1-42 (Aasif Sheikh, 4.5 ov), 2-66 (Kushal Bhurtel, 7.2 ov), 3-259 (Rohit Paudel, 18.1 ov)
BOWLING O M R W ECON WD NB
2 0 30 0 15.00 3 4
4 0 38 0 9.50 0 0
4 0 47 1 11.75 2 0
4 0 60 1 15.00 2 1
3 0 55 0 18.33 4 1
1 0 27 0 27.00 1 0
2 0 55 1 27.50 4 1
Mongolia  (T: 315 runs from 20 ovs)
BATTING R B 4s 6s SR
b Karan KC 1 10 0 0 10.00
lbw b Sompal Kami 0 2 0 0 0.00
c Sompal Kami b Bohara 3 12 0 0 25.00
b Karan KC 0 2 0 0 0.00
b Lamichhane 10 23 2 0 43.47
lbw b Bohara 1 2 0 0 50.00
b Lamichhane 1 9 0 0 11.11
b Airee 0 9 0 0 0.00
run out (Lamichhane/Airee) 0 5 0 0 0.00
c Sompal Kami b Bhurtel 2 6 0 0 33.33
not out 0 1 0 0 0.00
Extras (lb 5, nb 2, w 16) 23
TOTAL 13.1 Ov (RR: 3.11) 41
Fall of wickets: 1-2 (Buyantushig Terbish, 0.5 ov), 2-10 (Nyambaatar Naranbaatar, 3.1 ov), 3-11 (Luvsanzundui Erdenebulgan, 3.3 ov), 4-20 (Enkh-erdene Otgonbayar, 5.2 ov), 5-29 (Od Lutbayar, 7.1 ov), 6-32 (Davaasuren Jamyansuren, 9.1 ov), 7-33 (Mungun Altankhuyag, 10.6 ov), 8-33 (Namsrai Bat-yalalt, 11.1 ov), 9-41 (Enkhtuvshin Munkhbat, 12.5 ov), 10-41 (Tumursukh Turmunkh, 13.1 ov)
BOWLING O M R W ECON WD NB
2 0 6 1 3.00 2 1
2 1 1 2 0.50 1 0
3 0 18 0 6.00 5 1
2 1 2 2 1.00 1 0
2 1 7 2 3.50 1 0
2 0 2 1 1.00 1 0
0.1 0 0 1 0.00 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT