Friday, May 17, 2024
Home » வெடிக்கச் செய்யப்பட்ட உலகப் போர் குண்டு

வெடிக்கச் செய்யப்பட்ட உலகப் போர் குண்டு

by sachintha
September 27, 2023 11:52 am 0 comment

சிங்கப்பூரின் கட்டுமானத் தளம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்தின் 100 கிலோகிராம் கொண்ட குண்டு ஒன்று அந்நாட்டு இராணுவத்தால் நேற்று (26) வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது.

4,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டுடன் வெடிக்கச் செய்யப்பட்டபோது அந்தப் பகுதியில் பெரும் அதிர்வு ஏற்பட்டது.

வானில் இருந்து வீசப்பட்டு வெடிக்காத நிலையில் இருந்த இந்த குண்டு குடியிருப்பு பகுதி ஒன்றில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 47 கிலோகிராம் வெடிபொருட்களைக் கொண்ட இந்த குண்டு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை தகர்க்கும் அளவுக்கு சக்தி கொண்டதாகும்.

1941 டிசம்பர் 8 ஆம் திகதி பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து சிங்கப்பூர் மீது ஜப்பான் விமானங்கள் முதல் முறை குண்டு வீச ஆரம்பித்தது. 1942 ஜனவரியில் குண்டுத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு பெப்ரவரியில் அந்த தீவை ஜப்பான் கைப்பற்றியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT