Sunday, April 28, 2024
Home » இலங்கையின் எதிர்கால மேம்பாட்டுக்காக எரிபொருள் வழங்க உறுதியளித்த சினோபெக்

இலங்கையின் எதிர்கால மேம்பாட்டுக்காக எரிபொருள் வழங்க உறுதியளித்த சினோபெக்

- விநியோகஸ்தர்கள் பாராட்டும் நிகழ்வில் நிறுவனம் தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
September 26, 2023 1:51 pm 0 comment

சினோபெக் இலங்கையின் ஆற்றல்மிக்க எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தனது அதிகாரப்பூர்வ நுழைவை கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கான பாராட்டு நிகழ்வில் அறிவித்தது.

இந்த முக்கியமான சந்தர்ப்பம் இலங்கையின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் ஆரம்பத்தையும் குறித்தது. இந்த நுழைவுடன், சினோபெக் அதன் நன்மைகளை முழுமையாக வழங்குவதற்கும், நாட்டிற்கு நிலையான, நீடித்த மற்றும் உயர்தர எண்ணெய் தயாரிப்புகளை வழங்குவதற்கும், விநியோகஸ்தர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆற்றல் ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது.

சினோபெக் மற்றும் இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக் இலங்கை முழுவதும் தற்போதுள்ள 150 நிரப்பு நிலையங்களை உரிமையாக்குவதற்கும் மேலும் 50 நிரப்பு நிலையங்களில் முதலீடு செய்வதற்கும் 20 வருட உரிமத்தைப் பெற்றுள்ளது. சினோபெக், இலங்கை மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு வலுவூட்டுவதற்காக, எண்ணெய் வகைகள் கொள்வனவு , சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றின் முழு செயல்முறைக்கும் சேவை செய்யும் திறனை தொடர்ந்து மேம்படுத்தும்.

உலகின் மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனமாகப் புகழ்பெற்று, வருடாந்த உற்பத்தித் திறனை 250 மில்லியன் தொன்கள் தாண்டிய பெருமையுடன், சினோபெக், அதன் நுகர்வோரின் தேவைக்கேற்ப உயர்மட்ட எரிபொருள் தயாரிப்புகளின் நிலையான விநியோகத்துக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக , அதன் பரந்த வளங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக வலிமையைப் பயன்படுத்த தயாராக உள்ளது. நிலையான மற்றும் உயர்தர எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கான இந்த அர்ப்பணிப்பு இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிப்பதுடன் மட்டுமல்லாமல்மற்றைய தொழில்துறைகளின் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

சினோபெக் புதுப்பிக்கப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகளுடன் உரிமம் பெற்ற பெற்றோல் நிலையங்களின் முறையான மாற்றத்தைத் தொடங்கியுள்ளது. இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சூழலை படிப்படியாக மேம்படுத்துவதற்கு வசதிகள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்தி, அவற்றின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற செயல்பாட்டை உறுதிசெய்து, விநியோகஸ்தர்களுடன் ஒப்புக்கொண்டபடி, தளம் மாற்றும் திட்டத்தை நிறுவனம் ஆரம்பிக்கவுள்ள அதேவேளை , சினோபெக் மும்மொழி வாடிக்கையாளர் சேவையை அறிமுகப்படுத்துவதுடன் , நிரப்பு நிலையங்களின் சேவைத் தரம் மற்றும் நுகர்வோரின் சேவை அனுபவத்தை மேம்படுத்தவுள்ளது.

கூட்டாண்மை வளர்ச்சிக்கான அதன் தத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சினோபெக் விற்பனையாளர் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. சினோபெக் அதன் முதிர்ந்த முகாமைத்துவ முறைமைகள் மற்றும் புதுமையான கருத்துக்களை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் , விற்பனையாளர்கள் நிரப்பு நிலைய செயல்பாடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப தள முகாமைத்துவ தரத்தை உயர்த்தவும் உதவுகிறது. விற்பனை ஊழியர்களுக்கு விரிவான பயிற்சியை வழங்கவும், தொழில்முறை செயல்பாடுகள் மற்றும் விதிவிலக்கான சேவை வழங்கலுக்குத் தேவையான திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை அவர்களுக்கு வழங்கவும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. சினோபெக்கின் குறிக்கோள், விற்பனையாளர்கள் மற்றும் நிலைய ஊழியர்கள் ஆகிய இரு சாராருக்கும் பரஸ்பரம் வெகுமதி அளிக்கும் பயணத்தை வளர்ப்பதாகும்.

சினோபெக் சரியான நேரத்தில் ஊக்க வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதுடன், இலங்கையின் சிறப்புப் பொருட்களை உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகள் மற்றும் புதுமையான வழிகளை ஆராய விநியோகஸ்தர்களை ஊக்குவிக்கும். இதற்கிடையில், சினோபெக் விற்பனையாளர்களுடன் நெருக்கமாகப் பணிபுரிந்து ஒவ்வொரு சமூகத்திலும் ஆழமாகச் செல்லவும், நிரப்பு நிலையத்தில் வசதியான சேவைகளை அறிமுகப்படுத்தவும், அதன் மூலம் பரந்த அளவிலான சமூகங்களுக்குப் பயனளிக்கும் தீர்வுகளை ஆராயவும் செய்யும். இலங்கையின் எரிசக்தி துறை மற்றும் தேசம் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புடன், சினோபெக் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT