Home » சந்திவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி சுதர்ஷன் ஆற்றிய மனிதநேயப் பணிக்கு பலரும் பாராட்டு

சந்திவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி சுதர்ஷன் ஆற்றிய மனிதநேயப் பணிக்கு பலரும் பாராட்டு

by Rizwan Segu Mohideen
September 21, 2023 5:56 pm 0 comment

மட்டக்களப்பு, சந்திவெளியில் இடம்பெற்ற வாகனவிபத்தையடுத்து, சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆற்றிய மனிதாபிமானப்பணி குறித்து அனைவரும் பாராட்டுத் தெரிவிக்கின்றனர். அவரது நடவடிக்ைகயானது மற்றைய அதிகாரிகளுக்கு முன்மாதிரியானதென்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை காத்தான்குடியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்தனர். மூன்று பேர் சென்ற வான் ஒன்றே விபத்துக்குள்ளானது.

காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது ஹுசைன் மற்றும் அவரது பேத்தி ஹிபா எனும் சிறுமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். வானில் பயணித்த முகம்மது ஹுசைனின் மனைவி படுகாயமடைந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வான் ஒன்றில் சவூதி அரேபியாவில் இருந்து வந்த தனது மகள், மருமகன் ஆகியோரை ஊருக்கு அழைத்து வருவதற்காக கொழும்பு விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, சந்திவெளி பிரதான வீதியில் வைத்து மரம் ஒன்றுடன் குறித்த வான் மோதியது.

வாகனத்தை செலுத்திச் சென்ற முஹம்மது ஹுசைன் மற்றும் அவரது மகளின் மகள் (பேத்தி_ வயது 4) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த ஹுசைனின் மனைவி படுகாயமுற்று நிலையில் நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் பயணித்த வான் சந்திவெளியில் வைத்து விபத்துக்குள்ளான போது அந்த வாகனத்தை சோதனை செய்த சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.சுதர்சன், உயிரிழந்த ஹுசைன் என்பவரின் ஒரு தொகைப் பணத்தைக் கண்டெடுத்துள்ளார்.

அந்தப் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பிலும், அந்தப் பணத்தை மீள குடும்பத்திடம் ஒப்படைப்பது தொடர்பிலும் உயிரிழந்த ஹுசைனின் குடும்பத்திற்கு சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரியப்படுத்தினார்.

அப்பணத்தை உயிரிழந்தவரின் குடும்பத்திடம் ஒப்படைப்பதற்கு சந்திவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி உரிய நடவடிக்கை எடுத்தார்.அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்றவுடன் இவ்வாறு துரிதமாகச் செயற்பட்ட அவரது செயல் குறித்து மக்கள் பாராட்டினர்.

பொலிஸ் பொறுப்பதிகாரி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் இவரைப் பாராட்டியுள்ளது.

எம்.எஸ்.எம். நூர்தீன்
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT