Friday, May 10, 2024
Home » அண்மையில் திவாலானதாக தெரிவிக்கப்படும் MTFE நிறுவனம் பிரமிட் பட்டியலில்

அண்மையில் திவாலானதாக தெரிவிக்கப்படும் MTFE நிறுவனம் பிரமிட் பட்டியலில்

- இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
August 24, 2023 12:37 pm 0 comment

பல்வேறு தரப்பினராலும் முதலீடு செய்யப்பட்டு அண்மையில் திவாலானதாக தெரிவிக்கப்பட்ட MTFE மற்றும் அது தொடர்பான நிறுவனங்களை, தடை செய்யப்பட்ட சட்டவிரோத பிரமிட் நிறுவனங்கள் பட்டியலில் இணைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அறிவித்தலொன்றை விடுத்துள்ள மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட 8 பிரமிட் திட்டங்களின் பட்டியலில் MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka (Pvt) Ltd, MTFE DSCC Group (Pvt) Ltd ஆகியவற்றை இலங்க மத்திய வங்கி உள்ளடக்கியுள்ளது.

  1. Tiens Lanka Health Care (Pvt) Ltd
  2. Best Life International (Pvt) Ltd
  3. Global Lifestyle Lanka  (Pvt) Ltd
  4. Mark- Wo International (Pvt) Ltd
  5. V M L International (Pvt) Ltd
  6. Fast 3Cycle  International (Pvt) Ltd (F3C)
  7. Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka
  8. Onmax DT
  9. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka (Pvt) Ltd, MTFE DSCC Group (Pvt) Ltd

குறித்த நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் வகை முதலீட்டு திட்டங்களை நடத்துவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டமொன்றினை நேரடியாக அல்லது மறைமுகமாக தொடங்குகின்ற, வழங்குகின்ற, ஊக்குவிக்கின்ற, விளம்பரப்படுத்துகின்ற, கொண்டு நடாத்துகின்ற, நிதியளிக்கின்ற, முகாமைத்துவம் செய்கின்ற அல்லது பணிக்கின்ற எவரேனும் ஆள் தண்டனைக்குரிய தவறொன்றிற்கான குற்றவாளியாவார்.

இவ்வாறான ஒரு திட்டத்தை ஆரம்பிக்கப்படுவதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

சட்டத்தினால்‌ தண்டிக்கப்படக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளுடன் தொடர்புபடுவதன் மூலம் ஏமாற்றப்படுதல், ஏமாறுதல், அதற்கு உதவுதல் உள்ளிட்ட விடயங்களிலிருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகிற, விளம்பரப்படுத்துகிற, விளம்பரப்படுத்துகிற, நடத்துகிற, நிர்வகிக்கிற அல்லது நடத்துகிற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்கி கூறுகிறது.

சில பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சமூகத்தின் சில தரப்பினரின் கூற்றுக்களை நிராகரிப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான பிரமிட் திட்டங்கள் தொடர்பில், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 83 (இ) பிரிவின்‌ ஏற்பாடுகளின்‌ நியதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபரைக்‌ கோரியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT