Tuesday, April 30, 2024
Home » ‘ALEC – Unite and Rebuild’ கருப்பொருளின் கீழ் தொழில்முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் COYLE

‘ALEC – Unite and Rebuild’ கருப்பொருளின் கீழ் தொழில்முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் COYLE

by Rizwan Segu Mohideen
August 22, 2023 3:43 pm 0 comment

COYLE ஏற்பாடு செய்திருந்த விசேட அமர்வொன்றின் மூலமாக அது இலங்கையின் அனைத்து மட்டங்கள் மற்றும் பின்னணியில் உள்ள தொழில்முயற்சியாளர்களையும் ALEC (Alliance of Lankan Entrepreneurs Chamber – இலங்கை தொழில்முயற்சியாளர் சம்மேளனத்தின் கூட்டமைப்பு) என்ற கருப்பொருளின் கீழ் ஒன்றுகூடச் செய்துள்ளது. தொழில்முயற்சியாளர்களிடையே ஒற்றுமையின் வலிமை மற்றும் நாட்டில் வணிக வளர்ச்சி மற்றும் பொருளாதார விஸ்தரிப்பை மேம்படுத்துவதற்கு உறுதியான கொள்கைகளின் அவசியம் குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ கலந்து சிறப்பித்தார்.

இந்த சந்திப்பின் போது, COYLE இன் தலைவர் ரசித் விக்ரமசிங்க உரையாற்றியதுடன், உறுதியான கொள்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கொள்கை வகுப்பதில் தொடர்ச்சியான மற்றும் அடிக்கடி தன்னிச்சையான ஏற்ற இறக்கங்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை அவர் வலியுறுத்தினார். தங்கள் ஊழியர்களின் நலனுக்காக அறிவை வளர்ப்பதற்கும், பரப்புவதற்கும் தொழில்முயற்சியாளர்களுக்கு பொறுப்பு உள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.

வர்த்தக சம்மேளனம் என்பதற்கும் அப்பால், COYLE ஆனது பகிரப்பட்ட நோக்கங்களைக் கொண்ட தொழில்முயற்சியாளர்கள் குழுவொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அமைப்பு சேவை அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்காக பாடுபடுவதுடன், இது வலுவூட்டல் மற்றும் நிலைபேண்தகு பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் அடிப்படையில் சர்வதேச வர்த்தக வாய்ப்புகள், இலங்கையால் பெரிதும் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக இந்த அமைப்பு உறுதியாக நம்புவதால், அதன் முயற்சிகள் புடவை, தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், உற்பத்தி, நிதிச் சேவைகள், மருந்துகள், மின்வலு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன.

ALEC இன் தலைவர் நிஷான் வாசலதந்திரியும் ALEC இன் வரலாறு மற்றும் நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டு கூட்டத்தில் உரையாற்றினார். இலங்கையில் தொழில்முயற்சியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ALEC, முன்னேற்றத்திற்கான பாதையில் எதிர்கொள்ளும் தடைகளை எதிர்கொள்வதற்கும், அவற்றைக் குறைப்பதற்கும் மற்றும் அகற்றுவதற்கும் அனைத்து தொழில்முயற்சியாளர்களுக்கும் ஒரே குரலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக COYLE ஆனது தொடர்பு வலையமைப்பு மற்றும் பல்வேறு தொழில்துறை தொடர்பான சிக்கல்களை நிர்வகிப்பதற்கு பல்வேறு பிராந்திய அமைப்புகளுடன் முறைசார் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. ALEC இன் உருவாக்கத்துடன் COYLE  ஆனது தற்போது 9 மாவட்டங்களில் உறுப்பினர்களை இணைக்கும் பெருந் திட்டத்துடன் அத்தகைய 28 அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது.

ALEC இன் செயலாளர் யசஸ் சந்திரசேகர, பொருளாதாரத்தில் தொழில்முயற்சியாளர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், COYLE போன்ற ஒரு வலுவான ஒன்றிணைந்த சம்மேளனத்தின் அவசியத்தை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அந்நியச் செலாவணிக்கு பங்களிப்பு ஆற்றுகின்ற போதிலும், இலங்கையின் தொழில்முயற்சியாளர்கள் ஒத்திசைவான அந்நியச் செலாவணி கொள்கைகள் இல்லாத காரணத்தால் சவால்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் வங்கிக் கட்டமைப்பு முறையின் முக்கிய வகிபாகம் பற்றி கலந்துரையாடுவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளுக்கான போதுமான ஆதரவின்மையின் அடிப்படையில் சந்திப்பில் கலந்து கொண்டோர் முன்வைத்த கடுமையான கரிசனைகளுக்கு அவர் பதிலளித்தார். மத்திய வங்கியானது வட்டி வீதங்களைக் குறைத்து வரும் நிலையில், அரச மற்றும் தனியார் துறை வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு அவற்றின் பயன்களை வழங்க முடியவில்லை. அவர் மற்றவற்றுடன் மேற்கோள் காட்டி, பணத்தை உள்நோக்கி ஈர்ப்பதற்காக முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட உயர் நிலையான வைப்பு வீதங்களால் ஏற்பட்ட நடைமுறையில் உள்ள உயர் வட்டி செலவுகள் இதற்கான அடிப்படைப் பிரச்சனையாகும். குறிப்பாக போதுமான ஆதரவின்மை மற்றும் வங்கித் துறையால் ஏற்படுத்தப்பட்ட தேக்க நிலை காரணமாக பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள மோசமான நிலை குறித்து தனது சக பணியாளர்களுடன் தமது கரிசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு மக்கள் வங்கியின் தலைவரை கூட்டத்தினர் வலியுறுத்தினர்.    

கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, தொழில்முயற்சியாளர்கள் சம்பாதித்த பணத்தில் அரசாங்க அதிகாரிகளின் சம்பளம் வழங்கப்படுவதால், தொழில்முயற்சியாளர்கள் மீதான அரசாங்க அதிகாரிகளின் அணுகுமுறையை மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டார். அரசாங்கத்திற்கு சாத்தியமான சிந்தனைகள் மற்றும் ஆர்வமுள்ள உள்ளார்ந்த நுண்ணறிவுகளை வழங்கும் COYLE க்கு அவர் நன்றி தெரிவித்தார். எந்தவொரு அபிவிருத்தியடைந்த நாட்டினதும் அத்திவாரம் நன்னெறி சார்ந்த தொழில்முயற்சியாண்மையாகும் எனவும், துரதிஷ்டவசமாக இலங்கையில் இதற்கான கட்டமைப்பு அந்த முன்னேற்றத்தை இளைஞர்,யுவதிகளிடம் ஊக்குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். COYLE போன்ற நிறுவனங்கள் வலுவான இளம் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT