Home » UNGC உடன்படிக்கையில் இணைந்து, நெறிமுறை சார்ந்த சுகாதாரப் பராமரிப்பு முன்னோடியாக மாறியுள்ள நைன்வெல்ஸ் மருத்துவமனை

UNGC உடன்படிக்கையில் இணைந்து, நெறிமுறை சார்ந்த சுகாதாரப் பராமரிப்பு முன்னோடியாக மாறியுள்ள நைன்வெல்ஸ் மருத்துவமனை

by Rizwan Segu Mohideen
August 22, 2023 3:37 pm 0 comment

இலங்கையில் தனியார் சுகாதாரத் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பில் முதன்மையான நிறுவனமான நைன்வெல்ஸ் மருத்துவமனை, ஐக்கிய நாடுகளின் (UN) சர்வதேச உடன்படிக்கையுடனான (UNGC) உடனான தனது முன்னோடி கூட்டாண்மையை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த உலகளாவிய முயற்சியுடன் இணைந்த இலங்கையின் முதல் மருத்துவமனை என்ற வகையில், இந்த நடவடிக்கை நைன்வெல்ஸ் மருத்துவமனையின் பொறுப்புணர்வுடனான வணிக நடைமுறைகள், நிலைபேண்தகைமை மற்றும் நெறிமுறை சார்ந்த சுகாதாரப் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கையானது நைன்வெல்ஸ் மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக செயல்படுகின்ற அதே சமயத்தில், நிறுவன ஆட்சி நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றின் முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கையில் பங்கேற்பதன் மூலம், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள் மற்றும் ஊழல்-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் மற்றும் அதன் நிலைபேண்தகைமை முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும் நைன்வெல்ஸ் மருத்துவமனை முயல்கிறது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கையில் அதன் பங்கேற்பானது, மேலும் சமத்துவம் மற்றும் கருணையுள்ள உலகத்தை உருவாக்குவதில் நைன்வெல்ஸின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் அதே நேரத்தில், சமூகத்தின் மேம்பாட்டுக்கு தீவிரமாக பங்களித்து, ஒரு வணிகம் என்ற ரீதியில் சுகாதாரத்திற்கான முழுமையான மற்றும் நிலைபேண்தகு அணுகுமுறையை ஊக்குவிக்கிறது.

“நைன்வெல்ஸ் மருத்துவமனை இரு தசாப்தங்களாக இலங்கையில் தரமான சுகாதாரப் பராமரிப்பின் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழந்து வருவதுடன், ஐ.நா. உலகளாவிய உடன்படிக்கையுடன் எமது ஒத்திசைவு, உலகளாவிய தரநிலைகள் மற்றும் நெறிமுறை மேன்மைக்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது,” என நைன்வெல்ஸ் மருத்துவமனையின் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான வைத்தியர் விபாஷ் விஜேரத்ன அவர்கள் குறிப்பிட்டார். “இந்த கூட்டாண்மை பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலின் அதியுயர்ந்த தரத்தை நிலைநிறுத்தும் அதே சமயத்தில், தலைசிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கான எமது குறிக்கோளின் பிரதிபலிப்பாகும்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஐநா சர்வதேச உடன்படிக்கை (UN Global Compact – UNGC) என்பது ஒரு தன்னார்வ முயற்சியாகும். இது உலகெங்கிலும் உள்ள வணிகங்களை நிலைபேண்தகு மற்றும் சமூகப் பொறுப்புள்ள நடைமுறைகளைத் தழுவுவதற்கு அழைப்பு விடுக்கிறது. மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பத்து கொள்கைகளை மையமாகக் கொண்டு, UNGC ஆனது அனைவருக்கும் நெறிமுறை சார்ந்த மற்றும் சமமான எதிர்காலத்தைப் பின்தொடர்வதில் ஒன்றுபட்ட உலகளாவிய சமூகத்தை வளர்க்கிறது.

பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான புகலிடமாக நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்ட நைன்வெல்ஸ் மருத்துவமனை, அவர்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் ஒரேயொரு தனியார் மருத்துவமனையாக விளங்குவதுடன், இப்போது UNGC இல் இணைந்த முதல் மருத்துவமனையாகவும் மாறியுள்ளது. விசேடமான மற்றும் கருணையுடன் கூடிய பராமரிப்பை வழங்கும் பாரம்பரியத்துடன், நைன்வெல்ஸ் மருத்துவமனை தொடர்ந்து எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தாண்டி,  இலங்கையின் மிகவும் நம்பகமான சுகாதார சேவை வழங்குநர்களில் ஒன்றாக மாறியுள்ளது.

நைன்வெல்ஸ் மருத்துவமனையானது ஐ.நா சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு எடுத்த தீர்மானம், இலங்கை மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் முற்போக்கான கண்ணோட்டத்தையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. UNGC உடனான இந்த ஒத்திசைவின் மூலம், நாட்டில் பொறுப்பான மற்றும் நிலைபேண்தகு சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதில் நைன்வெல்ஸ் மருத்துவமனை முன்னோடியாகத் திகழ்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT