சமுர்த்தி சுபீட்ச வீட்டுத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளியான திறப்பனைப் பிரதேச செயலகப் பிரிவின் கல்குளம் பகுதியைச் சேர்ந்த திருமதி சம்பிகா இந்துனில் என்பவருக்கான நலன்புரி இல்லம் கடந்த 06ஆம் திகதி திறப்பனை பிரதேச செயலாளர் கே.பி.கே.எல்.பி. மதுவந்தியினால் பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.
விதவை பெண்ணான திருமதி சம்பிகா இந்துனில், தனது இரண்டு பிள்ளைகள் சகிதம் மற்றும் வயதான பெற்றோருடன் தனது சகோதரரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவளது தந்தைக்குச் சொந்தமான நிலத்தில் “சௌபாக்கியா சமுர்த்தி வீடமைப்பு திட்டத்தின் கீழ்” புதிய வீடு கட்டும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் பங்களிப்புடன் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் இந்த சுபீட்ச வீட்டை நிர்மாணிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திறப்பனை தினகரன் நிருபர்