Monday, May 27, 2024
Home » காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்தடைந்த Cordelia Cruises கப்பலுக்கு வரவேற்பளித்த Advantis

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்தடைந்த Cordelia Cruises கப்பலுக்கு வரவேற்பளித்த Advantis

by Rizwan Segu Mohideen
July 19, 2023 11:27 am 0 comment

வட மாகாணத்திற்கான கடல்சார் பயணம் மற்றும் சுற்றுலாவின் புதிய சகாப்தத்தை முன்வைத்து, Cordelia Cruises ஸிலிருந்து இலங்கைக்கான முதல் சொகுசுக் கப்பலான MS Empress, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் (KKS) வரவேற்பு அறிக்கப்பட்டது.

சொகுசுக் கப்பல் யாழ்ப்பாணத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் பெர்னார்ட் மற்றும் Advantis குழுமத்தின் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய கௌரவமான அதிகாரிகள் KKS துறைமுகத்தில் நடைபெற்ற சம்பிரதாய வரவேற்பு நிகழ்வுகளுடன் Cordelia Cruises இன் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

“யாழ்ப்பாணத்தில் உள்ள அற்புதமான கப்பல்துறையில் MS Empress கப்பலை நேரில் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது KKS துறைமுகத்திற்கு ஒரு சொகுசு பயணக் கப்பல் வந்தடைந்தது முதன்முறையாகும். இந்த முக்கியமான சந்தர்ப்பம் யாழ் ஒரு விரும்பப்படும் சுற்றுலாத் தலமாக வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது மட்டுமன்றி அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஆற்றலையும் கொண்டுள்ளது. கலாச்சார பாரம்பரியம் மற்றும் துரிதமான பொருளாதார நடவடிக்கைகளின் செழிப்பான மையமாக இப்பகுதி செழித்து வளரும் எதிர்காலத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம்.

இந்த முயற்சியின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை விருந்தோம்பல், சில்லறை விற்பனை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் வணிகங்கள் உட்பட பல்வேறு துறைகளைத் தூண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் MS Empress அழைக்கும் மூன்று பிராந்தியங்களான ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலுள்ள சமூகங்களுக்கும் மிகவும் சிறப்பான தாக்கத்தை உருவாக்குகிறதுஎன கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

MS Empress இன் வருகையானது, Hayleys PLC இன் போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் பிரிவான Advantis குழுமம் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த கப்பல் வரிசைகளில் ஒன்றான Cordelia Cruises ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு முக்கிய கூட்டாண்மை மூலம் இலங்கைக்கான உல்லாசப் பயணிகளின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.

“Cordelia Cruises உடனான எமது கூட்டணி இலங்கையில் புதிய பயண யுகத்தை முன்வைக்கிறது. போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் துறையில் முன்னோடியாக, கடல்சார் சேவைகளில் நிபுணத்துவத்துடன், பயண மற்றும் சுற்றுலா வளர்ச்சியை உருவாக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். Cordelia குழுவுடன் சேர்ந்து, அடுத்த நான்கு மாதங்களுக்குள் மட்டும் குறைந்தது 80,000 உல்லாசப் பயணிகளை ஈர்த்து, நாட்டின் பலதரப்பட்ட சலுகைகளைக் காண்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த கூட்டாண்மை குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவது மட்டுமல்லாமல், கலாச்சாரங்களுக்கு இடையேயான தொடர்புகளை வளர்ப்பதற்கும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உறுதியளிக்கிறது.” என Advantis குழும முகாமைத்துவப் பணிப்பாளர் ருவன் வைத்தியரத்ன தெரிவித்தார்.

MS Empress ஆனது 796 கேபின்களை ஐந்து தனித்தனி பிரிவுகளில் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதிநவீன வசதிகளால் நிறைந்துள்ளதுடன், அதன் 1,600 பயணிகளுக்கு இணையற்ற சொகுசு மற்றும் வசதியை வழங்குகிறது. இந்தக் கப்பல் 2023 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு தனது முதல் பயணத்தைத் ஆரம்பித்தது.

Advantis குழுமத்தின் பயண மற்றும் விமானப் பிரிவு பொது விற்பனை முகவராக பணியாற்றும் அதேவேளை Advantis குழுமத்தின் துணை நிறுவனமான Clarion Shipping இலங்கையில் Cordelia Cruises க்கான துறைமுக முகவராக செயற்படும்.

பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவுகள், மியன்மார், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட அட்வான்டிஸ் இலங்கையின் மிகவும் பல்வகைப்பட்ட போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் சேவை வழங்குநராகும். ப்ளூ-சிப் பன்னாட்டு நிறுவனமான Hayleys PLCஇன் ஆதரவுடன், Advantis போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் தொழில்களில் முன்னணியில் உள்ளது, ஒருங்கிணைந்த ஏற்றி இறக்கல்கள், திட்டங்கள் மற்றும் பொறியியல், கடல் மற்றும் ஆற்றல், சர்வதேச சரக்கு நிர்வகிப்பு மற்றும் பயணம் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஆரம்பபம் முதல் முடிவு வரையான தீர்வுகளை வழங்குகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT