Monday, June 17, 2024
Home » நாட்டில் சுமார் 60 வீதமான சிறார்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை
பெற்றோருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

நாட்டில் சுமார் 60 வீதமான சிறார்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை

நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில் தகவல்

by mahesh
May 25, 2024 2:30 pm 0 comment

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வை மேற்கொண்டதாக விசேட வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதில் பல சிறுவர்கள் இரவு நேரத்தில் தூக்கமின்றி எப்போதும் கவலையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறுவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையை சரியான முறையில் முன்னெடுப்பதில்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையான சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் உடல் சரியாக செயல்படாததால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வதாகவும், பெற்றோரால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவசியமாக இருந்தால் மட்டும் எந்தவொரு சிறுவர்களையும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு பெற்றோரிடம் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT