Monday, June 17, 2024
Home » சவால்களை முறியடித்து நிலைநாட்டப்பட்ட வெற்றி: விருந்தோம்பல் துறையில் குமுதுவின் பயணம்

சவால்களை முறியடித்து நிலைநாட்டப்பட்ட வெற்றி: விருந்தோம்பல் துறையில் குமுதுவின் பயணம்

by Rizwan Segu Mohideen
May 22, 2024 2:06 pm 0 comment

ஆணாதிக்கம் நிறைந்த ஒரு துறையாக காணப்பட்ட, வலுமிக்க விருந்தோம்பல் தொழில்துறையில், இரும்புத்திரையை தகர்த்து, பெண்கள் தமது பெயரை நிலைநாட்டி வரும் போக்கினை நாம் தற்போது காணக்கூடியதாக உள்ளது. வியக்கத்தக்க மனோபலத்தையும், எந்த சூழ்நிலையிலும் தளர்ந்து போகாத வலிமையும் கொண்ட குமுது சேபாலி இத்தகையதொரு பெண்ணாக காணப்படுவதுடன், எமக்கு ஊக்கமளிக்கும் அவரது வெற்றி வரலாறு அனைத்து வழக்கங்கள் மற்றும் மரபுகளை மீறியதாக உள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அவரது பயணம், அவரது வழியில் அவர் அடைந்துள்ள தனிப்பட்ட வெற்றிகளை பிரதிபலிப்பது மட்டுமன்றி, சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகளால் வளர்க்கப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கும் ஒரு பணிச்சூழலின் துணையுடன், அவரது தைரியமும் இணைந்து, பணியிடத்தில் பெண்களுடன் தொடர்புபட்ட நீண்டகால மரபுகளுக்கு சவால்விடுத்து அவர் எவ்வாறு வெற்றியீட்டியுள்ளார் என்பதையும் நமக்குக் காண்பிக்கின்றது.

விருந்தோம்பல் உலகின் மீதான குமுதுவின் நேசம் அவரது சிறுவயது கனவாகவே துளிர்விட்டது. “ஹோட்டல்களில் பணியாற்றி, ஈற்றிலே படிப்படியாக மேலுயர்ந்து முகாமைத்துவப் பதவி நிலையொன்றை அடையும் எண்ணத்தை எனது சிறுவயது முதற்கொண்டே நான் நேசித்து வந்துள்ளேன்,” என்று அவர் புன்னகையுடன் நினைவுகூர்ந்தார். அவர் தனது முதலாவது தொழிலாக இத்தொழில்துறையில் காலடியெடுத்து வைத்த சமயத்தில், குமுதுவின் சிறுவயது ஆவல், வாழ்நாள் முழுவதும் பேரார்வத்தை ஏற்படுத்தச் செய்யும் ஒன்றாக அவருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த பேரார்வம் வெறுமனே தொழில்ரீதியானது மட்டுமல்லாது, மகத்தான அனுபவங்களை வழங்கி, தங்கிச்செல்லும் அனைத்து விருந்தினர்களுக்கும் மறக்க முடியாத நினைவுகளைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற உணர்வுடனும் தொடர்புபட்டது. “விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தோற்றுவிப்பது எனக்கு பேரானந்தத்தை ஏற்படுத்தியதுடன், மிகவும் வலுவான இயல்பு கொண்ட இத்தொழிற்துறையை நான் திறந்த கரங்களுடன் தழுவிக்கொண்டேன். அடுத்தவர்களுக்கு சேவையாற்றி, எம்முடன் தங்கிச்செல்லும் அனுவங்களை விசேடமான மாற்றுவதில் கொண்டிருந்த உண்மையான பற்றின் உந்துசக்தியுடன், விருந்தோம்பல் துறையில் சிறப்பாகத் திகழும் எனது தொழிலின் ஆரம்பத்தைக் குறிக்கும் முக்கிய தீர்மானத்தை மேற்கொண்டேன்.”

விருந்தோம்பல் துறையில் குமுது தன்னம்பிக்கையை வளர்த்ததுடன், அவரது உறவினர்கள் மற்றும் அயலவர்கள் மத்தியில் ஒரு முன்னுதாரணமாகவும் அவர் மாறினார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் படிப்படியான வெற்றி அவரது சமூகத்திற்கும் ஒரு உந்துசக்தியாக மாறியது மட்டுமன்றி, அவரது மகளும், மகனும் கூட அவரது காலடியைப் பின்தொடர்வதற்கு வழிவகுத்ததுடன், இத்தீர்மானத்தை அவர் பெருமையுடன் ஊக்குவித்து, தட்டிக்கொடுத்தார். இத்தொழில்துறையில் நிலைபெறுவதற்கு ஆதரவு என்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட குமுது அவர்கள், தான் இத்தொழில்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு கிட்டத்தட்ட எவ்விதமான ஆதரவும் இருக்கவில்லை என்பதை நினைவுகூர்ந்தார். உண்மையில் அவர் இத்தொழில்துறையில் கால்பதிப்பதற்கு அவரது ஊக்கத்தைக் கெடுக்கும் வகையில் பலரும் நடந்துகொண்டனர். “விருந்தோம்பல் தொழில்துறை என்பது ஆண்களுக்கே மிகவும் பொருத்தமானது என்றும், நான் பாரம்பரியமான இல்லத்தரசி பாத்திரத்தின் மீதே கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறி எனது அயலவர்கள் அடிக்கடி எனது ஊக்கத்தைக் கெடுத்தனர்.”

யார் என்ன கூறினாலும் மனதைத் தளர விடாத குமுது அவர்கள், தனது சிறுவயதுக் கனவை நனவாக்கும் முயற்சியை ஊக்கத்துடன் முன்னெடுத்தார். வளர்ச்சிக்கும், சாதிப்பதற்கும் ஒப்பற்ற வாய்ப்புக்களை இத்தொழில்துறை வழங்குகின்றது என்ற அவரது உண்மையான நம்பிக்கை அவருக்குள் ஆழமாக வேரூன்றி அவரது உந்துசக்தியாகவும் காணப்பட்டது. “பணியிடத்தில் பெண்களின் பாத்திரங்கள் தொடர்பான மூடநம்பிக்கைகளை தகர்க்க வேண்டுமென நான் விரும்பியதுடன், தொழில்சார் ரீதியாக பெண்களும் சம ஆற்றல் கொண்ட தலைவர்களாக திகழ முடியும் என்பதை அத்தகையவர்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க விரும்பினேன்,” என்று தைரியமாகக் கூறிய அவர், பழமைவாதிகளுக்கு சவால்விடுவதில் தனது திடசங்கல்பத்தை சுட்டிக்காட்டினார்.

தனது ஆரம்பகால நம்பிக்கைகளை நிரூபிப்பதற்கான வாய்ப்பினை சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகளில் குமுது பெற்றுக்கொண்டார். உணவு மற்றும் பானங்கள் பணிப்பிரிவில் ஒரு பயிலுனர் சிப்பந்தியாக சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள் குமுதுவின் பயணம் ஆரம்பித்தது. ஆரம்பத்திலிருந்தே வெறுமனே தொழில்தருநர் என்பதற்கும் அப்பாற்பட்டதாக ஹோட்டல் மாறியதுடன், தனது ‘இரண்டாவது குடும்பம்’ என்று அதனைக் குறிப்பிட்ட குமுது அவர்கள், தனது தொழில்வாழ்வில் வளர்ச்சிக்கான ஊக்கியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார். “என்னைப் பொறுத்தவரையில் இந்த ஹோட்டலை நான் எனது இரண்டாவது குடும்பம் என்றே கூறுவேன். எனது தொழிலில் வளர்ச்சி காண்பதற்கு அதுவே என்னை ஊக்குவித்தது. நான் வளர்ச்சி காண்பதற்கு எனக்கு உதவிய இந்த இடத்திற்கு கைம்மாறு செய்யவேண்டும் என நான் விரும்பினேன்,” என்று அவர் நன்றியுணர்வுடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் பேரார்வம் ஆகியன கடந்த காலங்களில் அவர் தொழிலில் வளர்ச்சி காண்பதற்கு அவரை வழிநடத்திச் சென்றுள்ளன. அறைகள் பராமரிப்புச் சேவை அதிகாரியாக இன்று பணியாற்றும் அவர், சுமார் 40 பராமரிப்புப் பணியாளர்களைக் கொண்ட அணிக்கு மேற்பார்வையாளராக உள்ளார். முகாமைத்துவ பதவிநிலையை அடைய வேண்டும் என்ற அவரது சிறுவயது கனவு, குமுது அவர்களைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட ஒரு சாதனை மாத்திரமல்லாது, இத்தொழில்துறையில் சாதனைகளை படைப்பதில் அபிலாஷைகளைக் கொண்டுள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஒரு உத்வேகமாக காணப்படுகின்றது.

“பயிலுனர்களோ, மேற்பார்வையாளர்களோ அல்லது அதிகாரிகளோ, ஹோட்டலில் பணியாற்றும் அனைத்து இளம் பெண்களுக்கும் நான் எப்போதும் கூறிக்கொள்ளும் விடயம் என்னவென்றால், கடினமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் போது மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதுடன், ஊக்கத்தைக் கெடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக்கூடாது,” என்று ஆலோசனை வழங்கிய குமுது அவர்கள், குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரையில் விருந்தோம்பல் துறையில் வெற்றி காண்பதற்கு, எந்த சூழ்நிலைக்கும் முகங்கொடுக்கும் ஆற்றல் படைத்தவர்களாகவும், திடசங்கல்பம் கொண்டவர்களாகவும் மற்றும் மன உறுதியுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

பால்ரீதியான பழமைவாதங்களைத் தகர்த்து, குமுதுவின் வெற்றிச் சரித்திரமானது வெற்றியை நோக்கிய ஒரு தனிநபரின் திடசங்கல்பமானது ஆதரவான மற்றும் உள்ளடக்கும் பணிச்சூழலில் வளர்க்கப்படும் போது போற்றத்தக்க சாதனைகளாக மாற முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றது. பெண்களுக்கு அத்தகையதொரு பணிச்சூழலை வளர்ப்பதில் சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகளின் வகிபாகத்திற்கு குமுதுவின் பயணம் சான்று பகருகின்றது. இத்தொழிற்துறையானது வெறுமனே ஆண்களுக்கு மாத்திரமானது அல்லது என்பதையும், திறமைமிக்கவர்களாக மாறுவதற்கு பெண்களையும் வரவேற்று, ஊக்குவிக்கின்றது என்பதையும் இப்பயணம் நிரூபிக்கின்றது.

விருந்தோம்பல் உலகில் வளர்ச்சி வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள யுவதிகளுக்கு குமுது ஒரு உத்வேகமாக உள்ளதுடன், இத்தொழில்துறையில் கிடைக்கும் வாய்ப்புக்களின் சாத்தியங்களுக்கும் சான்றாக உள்ளது. அவர் பெற்றுள்ள தன்னம்பிக்கை, சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகளில் அவர் பெற்றுள்ள அனுபவம், சவால்களை எதிர்கொள்வதில் அவரது ஆற்றல் ஆகிய அனைத்தும் இணைந்து, சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை மீறுகின்ற, பாரம்பரியமான பாலின அடிப்படையிலான பாத்திரங்களை மீறுகின்ற ஒரு வெற்றிச் சரித்திரத்திற்கு பங்களிக்கின்றன.

புதிய திறமைசாலிகளுக்கு விருந்தோம்பல் தொழில்துறை அழைப்பு விடுக்கின்ற நிலையில், குமுது போன்றவர்களின் வெற்றிச் சரித்திரங்கள், தமது திறமைசாலிகள் குழாத்தின் வெற்றியை தீவிரமாக மதித்து, அதற்கு ஆதரவளிக்கின்ற வகையில், அனைவரையும் உள்ளடக்கிய பணிச்சூழலை வளர்க்கும் போது, ஊழியர்களால் எதனை சாதிக்க முடியும் என்பதற்கான அடையாளமாக உள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT