Home » வடக்கில் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்பு

வடக்கில் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்பு

by Prashahini
July 19, 2023 11:58 am 0 comment

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (19) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில், அதிகரித்த மது பாவனையின் காரணமாக இன்சுலின் உற்பத்தி தடைப்படுவதோடு, நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றது. அதேபோல போதைப் பொருள் பாவனையும் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக மதுபாவனை மற்றும் போதைபொருள் பாவனையினால் நரம்பியல் நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

எனவே, இந்த மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்,

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT