Monday, June 17, 2024
Home » மலையக வீதிகளில் மரங்கள் முறிந்து விழும் அபாயம்
நிலவும் கடும் மழை, பலத்த காற்று

மலையக வீதிகளில் மரங்கள் முறிந்து விழும் அபாயம்

சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

by mahesh
May 25, 2024 1:30 pm 0 comment

நிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நேற்று (24) அதிகாலை ஹப்புத்தளைக்கும் தியத்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் வீதி முற்றாக தடைப்பட்டிருந்ததாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இப்பகுதியிலுள்ள பாரிய மரங்கள் எந்த நேரத்திலும் விழும் அபாயம் காணப்படுவதாக சாரதிகளும் பிரதேசவாசிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும், மாற்று வீதியாக தியத்தலாவ உடபர கஹகொல்ல ஊடாக பண்டாரவளை வீதியை பயன்படுத்துமாறும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர தயாரத்ன தெரிவித்தார்.

தியத்தலாவ இராணுவம், தியத்தலாவ பொலிஸார், ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை, ஹப்புத்தளை பிரதேச சபை, ஹப்புத்தளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனர்த்த பிரிவின் குழுக்கள் இணைந்து பிரதான வீதியில் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு.ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT