Monday, June 17, 2024
Home » CID தேடும் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி

CID தேடும் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி

- தகவல் வழங்குவோருக்கு ரூ. 20 இலட்சம் சன்மானம்

by Rizwan Segu Mohideen
May 25, 2024 2:21 pm 0 comment

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் அல்லது தெரிய வந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு CID இற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் – 071 8591753
  • குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரி – 071 8591774

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிவிக்கும் நபருக்கு ரூ. 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும், தகவல் வழங்கும் நபர் தொடர்பிலான இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான விபரங்கள்

  • பெயர்: ஜெரர் புஷ்பராஜா ஒஸ்மன் ஜெராட்
  • வசிப்பிடம்: தெமட்டகொடை
  • பிறந்த வருடம்: 1978
  • உயரம்: 5 அடி 6 அங்குலம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT