கரைவலை கயிறை மீட்க சென்றவர் மூழ்கி பலி | தினகரன்

கரைவலை கயிறை மீட்க சென்றவர் மூழ்கி பலி

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவத்தை சின்னவெம்பு கடலில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாலையடித்தோன சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

வழக்கம்போல் நேற்று (29)நண்பகல் கரைவலைத் தொழிலுக்குச் சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

கரைவலைத் தொழிலுக்கு பெரும்பாலும் குறித்த பிரதேசத்தில்  உழவு இயந்திரமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.கரைவலையை இழுக்கும்போது, உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்ட கயிறு அறுந்து சென்ற நிலையில், அதனை மீண்டும் உழவு இயந்திரத்தில் இணைக்கும் முகமாக  கடலில் இருந்து எடுக்கச்சென்ற வேளை குறித்த மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஏனைய மீனவர்கள் தெரிவித்தனர்.

சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(பாசிக்குடா நிருபர்– உருத்திரன் அனுருத்தன்)

 


Add new comment

Or log in with...