படகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது | தினகரன்

படகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது

படகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது-Fishing Boat Accident Crash on Rock-One Rescued One Body Found

திருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவரின் சடலம் இன்று (09) பிற்பகல் 1.00 மணியளவில் மீட்கப்பட்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை மனையாவெளி பகுதியைச்சேர்ந்த எம். எச். ருக்மன் டி சில்வா (37) எனவும் துறைமுக  பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்றையதினம் (08) திருகோணமலை, மனையாவெளி  பகுதியிலிருந்து படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இருவரில் படகு  கற்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மற்றுமொரு மீனவர் காணாமல் போயிருந்தார் இவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று  (09) பிற்பகல் மனையாவெளி கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் துறைமுக பொலிஸார் குறிப்பிட்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...