தலவாக்கலை நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தம்

தலவாக்கலை நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் 29.09.2015 நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் 190 பேர் ஈடுபட்டனர். இத்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டிய சலுகைகள் வழங்கப்படவில்லை யென தெரிவித்தே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தொழி லாளர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் வீடுகளில் நடை பெறும் விசேட நிகழ்வுகளுக்கு வழமை யாக தோட்ட நிர்வாகத்தால் விறகு வழங்கப்படுகின்றது. கடந்த 20ம் திகதி அன்று தோட்டத்தில் உள்ள ஒருவரின் குடும்பத் தேவைக்காக விறகு வெட்டுவதற்காக தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்படி அதிகாரியால் விறகு வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினை சேர்ந்தவர்கள் கடந்த 26ம் திகதி விறகு வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது குறித்த தோட்ட வெளிகள அதிகாரி அவர்கள் தான் விறகு வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட வில்லையென கூறி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அன்றைய தினம் பொலிஸ் அதிகாரிகள் தோட்டத்துக்கு சென்று விறகையும் கைப்பற்றியதுடன் சம்பந்தப்பட்ட நபரை தோட்ட நிர்வாகத்துக்கு 15,000 ரூபா வழங்கப்புமாறு பொலிஸ் நிலையத்தில் வைத்து முடிவு செய்யப்பட்டது.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை.

பகல் உணவுக்கு தொழிலாளர்களை செல்லவிடாமல் கொழுந்து பறிக்குமாறு அதிகாரிகள் பணிப்பதாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம் உரிய நேரத்திற்கு வழங்கப்படாமல் அன்றைய தினம் தங்களின் தேவைகளை முடித்துக் கொண்டு தொழிலாளர்களை காக்கவைத்து கொண்டு இறுதி நேரத்தில் சம்பளம் வழங்குவதாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்ட தொழிலாளர்களின் வங்கிக்கு அனுப்ப வேண்டிய கொடுப்பனவுகள் குறிப்பிட்ட திகதிகளில் அனுப்பப்படுவதில்லை இதனால் பல சிரமங்களை இவர்கள் எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான குறைப்பாடுகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் செய்ய வேண்டுமென கோரியே 29.09.2015 அன்றைய தினம் மக்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொழிலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...