கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

இன்று இரவு 8.00 மணி முதல் கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்வுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (19) வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி முதல் நாளை (20) இரவு 8.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்குமென சபை தெரவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 04, 05, 07, 08 ஆகிய பகுதிகள், கோட்டை மற்றும் கடுவெல நகரசபைக்குட்பட்ட பிரதேசங்கள் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன.

கொழும்பு 01 - 15 பெயர்கள் (Colombo 01 - 15 Names)

  • கொழும்பு 1 - கோட்டை
  • கொழும்பு 2 - கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
  • கொழும்பு 3 - கொள்ளுப்பிட்டி
  • கொழும்பு 4 - பம்பலப்பிட்டி
  • கொழும்பு 5 - ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
  • கொழும்பு 6 -  வெள்ளவத்தை, பாமன்கடை
  • கொழும்பு 7 - கறுவாத்தோட்டம்
  • கொழும்பு 8 - பொரளை
  • கொழும்பு 9 - தெமட்டகொட
  • கொழும்பு 10 - மருதானை, பஞ்சிகாவத்தை
  • கொழும்பு 11 - புறக்கோட்டை
  • கொழும்பு 12 - புதுக்கடை, வாழைத்தோட்டம்
  • கொழும்பு 13 - கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
  • கொழும்பு 14 - கிராண்ட்பாஸ்
  • கொழும்பு 15 - மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

Add new comment

Or log in with...