தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சி மனு தாக்கல்

உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்து உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரால் ஒரு மனுவும், தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அநுர பிரியதர்ஷன யாபா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரால் மற்றுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...