உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு திகதி இம்மாத இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும்

- தேர்தல் மாவட்ட வாரியான வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் எண்ணிக்கை பட்டியலும் வெளியீடு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியை இம்மாதத்தின் (டிசம்பர்) கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (08) இடம்பெற்ற ஆணைக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் அம்மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

PDF icon MR_2022_20_T.PDF (25.6 KB)

PDF icon MR_2022_20_S.PDF (25.38 KB)

PDF File: 

Add new comment

Or log in with...