இந்திய அணியை 10 விக்கெட்டுகளால் வென்று இறுதிப் போட்டி நுழைந்தது இங்கிலாந்து

- ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

2022 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

இன்றையதினம் (10) அவுஸ்திரேலியாவின், அடிலைட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் ஹார்டிக் பாண்ட்யா 63 (33) ஓட்டங்களையும்
விராட் கோலி 50 (40) ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 27 (28) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் கிறிஸ் ஜோர்டன் 3/43 விக்கெட்டுகளையும் ஆதில் ரஷீட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 169 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு எவ்வித விக்கெட் இழப்புமின்றி 170 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 86 (47) ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 80 (49) ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணி பந்துவீச்சாளர்கள் எவ்வித விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியாமல் போனதோடு, ஆங்காங்கே ஒரு சில ஆட்டமிழப்புக்கான வாய்ப்புகளை இந்திய அணி தவற விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாயகனாக, அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவானார்.

அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 2022 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் MCG​ மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

India  (20 ovs maximum)
BATTING   R B M 4s 6s SR
KL Rahul  c †Buttler b Woakes 5 5 8 1 0 100.00
Rohit Sharma (c) c Curran b Jordan 27 28 37 4 0 96.42
Virat Kohli  c Rashid b Jordan 50 40 75 4 1 125.00
Suryakumar Yadav  c Salt b Rashid 14 10 14 1 1 140.00
Hardik Pandya  hit wicket b Jordan 63 33 47 4 5 190.90
Rishabh Pant † run out (†Buttler/Jordan) 6 4 13 1 0 150.00
Ravichandran Ashwin  not out 0 0 4 0 0 -
Extras (w 3) 3  
TOTAL 20 Ov (RR: 8.40) 168/6
 
Fall of wickets: 1-9 (KL Rahul, 1.4 ov), 2-56 (Rohit Sharma, 8.5 ov), 3-75 (Suryakumar Yadav, 11.2 ov), 4-136 (Virat Kohli, 17.6 ov), 5-158 (Rishabh Pant, 19.3 ov), 6-168 (Hardik Pandya, 19.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Ben Stokes 2 0 18 0 9.00 5 2 1 0 0
Chris Woakes 3 0 24 1 8.00 5 1 1 2 0
Sam Curran 4 0 42 0 10.50 9 5 2 0 0
Adil Rashid 4 0 20 1 5.00 8 1 0 0 0
Liam Livingstone 3 0 21 0 7.00 7 3 0 0 0
Chris Jordan 4 0 43 3 10.75 8 3 3 1 0
England  (T: 169 runs from 20 ovs)
BATTING   R B M 4s 6s SR
Jos Buttler (c)† not out 80 49 74 9 3 163.26
Alex Hales  not out 86 47 74 4 7 182.97
Extras (w 4) 4  
TOTAL 16 Ov (RR: 10.62) 170
 
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Bhuvneshwar Kumar 2 0 25 0 12.50 4 3 1 1 0
Arshdeep Singh 2 0 15 0 7.50 4 2 0 1 0
Axar Patel 4 0 30 0 7.50 10 2 2 0 0
Mohammed Shami 3 0 39 0 13.00 7 4 3 0 0
Ravichandran Ashwin 2 0 27 0 13.50 1 1 2 1 0
Hardik Pandya 3 0 34 0 11.33 5 1 2 0 0

 


Add new comment

Or log in with...