இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ‘சூப்பர் சீரிஸ்’

- ரமிஸ் ராஜா கோரிக்கை
  
ஒவ்வொரு ஆண்டும் 4 நாடுகள் மோதும் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். இந்த இரு நாடுகளும் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கிண்ண  தொடர்களில் மட்டும் தற்போது இணைந்து விளையாடி வருகின்றன. இதைத்தவிர இரு நாடுகளும் சேர்ந்து விளையாடும் சூழல் இப்போது இல்லை.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து விளையாடும் ‘சூப்பர் சீரிஸ்’ 20க்கு 20 தொடர் ஒன்றை உருவாக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமிஸ் ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகம் ரசிகர்கள் உண்டு.

இதையடுத்து இந்த 4 நாடுகளையும் இணைத்து ’சூப்பர் சீரிஸ்’ என்ற தொடரை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடர் நடைபெறும் வகையில் ஐசிசி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த போட்டிகள் மூலம் வரும் லாபத்தை விதிமுறைகள்படி பிரித்து எடுத்துக்கொள்ளலாம்.


Add new comment

Or log in with...