பாலியல் குற்றங்கள் அதிகரிக்க கையடக்க தொலைபேசிகளின் தவறான பயன்பாடும் காரணம்

பாலியல் குற்றங்கள் அதிகரிக்க கையடக்க தொலைபேசிகளின் தவறான பயன்பாடும் காரணம்-Mobile Phone Usage Also Reason for Sexual Crimes

- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

'கையடக்கத் தொலைபேசிகளின் தவறான பயன்பாடு காரணமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த குணங்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மினார்-இ-பாகிஸ்தான் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்,

இச்சம்பவம் பெரிதும் கவலையளிக்கின்றது. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற நம் குழந்தைகள் சரியாக வழிநடாத்தப்படாமையும் ஒரு காரணம். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் நமது கலாசாரத்தினதோ, மதத்தினதோ ஒரு பகுதி அல்ல. கடந்த காலத்தில், நம் நாட்டில் பெண்களுக்குக் கிடைத்த மரியாதை உலகில் எங்கும் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக மேற்கில் கூட இவ்வாறு கிடைக்கவில்லை" என்றும் கூறினார்.

கடந்த ஆட்சியாளர்கள் கல்வித் துறைக்கு ஒரு போதும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அது அவர்களின் முன்னுரிமையாக இருக்கவில்லை. அத்தோடு நாட்டுக்கான பொதுப்பாடத்திட்டம் குறித்தும் எவரும் எண்ணிப் பார்க்கவில்லை" என்று அவர் சுட்டிகக்காட்டினார்.

அதேநேரம், பாகிஸ்தானில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது தொடபிலான தனது நிலைப்பாட்டை பிரதமர் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார். இது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து கவலைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக 'ட்ரிபூன்' குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...