பாகிஸ்தான் சுதந்திர தினம் - எசல பெரஹரா; ஆவணப்படம்

பாகிஸ்தானின் 75ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்தவாறு, இவ்வருட கண்டி எசல பெரஹெரா விழாவுடன், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஆவணப்படமொன்று வெளியிடப்படுகின்றது.

"காந்தார - பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியம்" என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படம் பாகிஸ்தானில் உள்ள பழமையான பெளத்த பாரம்பரிய இருப்புக்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

சித்திவிநாயக் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இணைந்து குறித்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...