பாராளுமன்ற அமர்வு நாளை முதல் 4 நாட்களுக்கு

பாராளுமன்ற அமர்வு நாளை முதல் 4 நாட்களுக்கு-Parliament Sittings Feb 9th-12th-MP Invited to Attend PCR Test

- PCR சோதனையில் பங்கேற்குமாறு எம்.பிக்களுக்கு அழைப்பு

பாராளுமன்ற அமர்வுகளை நாளை (09) முதல் பெப்ரவரி 12ஆம் திகதி வரை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ அறிவித்துள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற இன்று இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற வளாகத்தில் நாளை (09) முற்பகல் 9.00 மணி முதல் நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்படவிருக்கும் எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப் பகுதியிலும், அமர்வுகள் இடம்பெறாத காலப் பகுதியிலும் வாரத்துக்கு ஒரு தடவை இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2021 ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் இதுவரை பாராளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட எழுமாறான PCR பரிசோனைகளின் அடிப்படையில், இறுதியாக கடந்த ஜனவரி 25ஆம் திகதி 190 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...