முதல் நாள் மாணவர்கள் வரவு 51%; ஆசிரியர்கள் வரவு 88%

முதல் நாள் மாணவர்கள் வரவு 51%; ஆசிரியர்கள் வரவு 88%-Schools Reopen-Students Attendance 51 Percent-Teachers 88 Percent
ஹட்டன் கல்வி வலயத்தில் 150 பாடசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட மவுன்ஜீன் பாடசாலையை தவிர்ந்த ஏனைய 149 பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் தெரிவித்தார். (படம்: ஹட்டன் விசேட நிருபர் - கே. சுந்தரலிங்கம்)

இன்று (11) நாடு முழுதுவதிலுமுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 51 வீதம் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் ஆசிரியர்களின் வருகை 88 வீதமாக பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று புது வருடத்தின் முதலாம் தவணைக்கான முதல் நாள் பாடசாலை தினம் என்பதோடு, கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மிக நீண்ட விடுமுறைக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிலும் தரம் 2 - 13 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பமாகியிருந்தது.

ஆயினும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணத்தில் எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி முதல் தரம் 11 மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரத்தியேக வகுப்புகள் ஜன.25 முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...