Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை 2020 | தினகரன்

Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை 2020

Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை 2020-Big Bad Wolf Online Book Sale Sri Lanka 2020

வீடுகளுக்கே புத்தகங்கள கொண்டு வந்து தரப்படும்

Big Bad Wolf Online Book Sale Sri Lanka 2020 முன்னர் அறிவிக்கப்பட்ட தினத்துக்கு முன்னதாகவே நடைபெறவுள்ளமையானது புத்தக பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

உலகின் பிரமாண்ட புத்தக கண்காட்சியாக அறியப்படும் Big Bad Wolf புத்தக விற்பனை இம்முறை ஒன்லைனில் நடைபெறவுள்ளது. தெற்காசியாவில் முதன்முதலில் ஒன்லைன் மூலமான இந்த விற்பனை, முதலில் ஒக்டோபர் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில்  வாசகர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கிணங்க நேற்று (30) இரவு 08:00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதன் மூலம் புத்தக பிரியர்கள் தீர்மானிக்கப்பட்டதை விட  முன்கூட்டியே புத்தக விற்பனையை அணுக முடியும் மற்றும் பிரபலமான 50 - 90% Big Bad Wolf புத்தக விற்பனை தள்ளுபடியை தொடரின் முந்தைய தொடர்களை விட மூன்று மடங்கு அதிக புத்தக தலைப்புகளுக்கு இம் முறை பெற்றுக்கொள்ள முடியும்.

Big Bad Wolf புத்தகங்களின் இணை ஸ்தாபகர் ஜாக்குலின் என்ஜி இது தொடர்பில் தெரிவிக்கையில், "மீண்டும், விற்பனை தொடங்கும் வரை ஆவலுடன் காத்திருக்கும் புத்தக பிரியர்களின் வேண்டுகோளுக்கு நாங்கள் செவிமடுத்துள்ளோம், எனவே இது திட்டமிடப்பட்டதை விட முன்பே செப்டம்பர் 30 ஆம் திகதி மாலை 08:00 மணிக்கு (IST) திறக்கப்படும். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அனைவரையும் மலிவு விலையில் புத்தகங்களுடன் வலுவூட்டுவதற்கான எங்கள் தொலைநோக்கு பார்வைக்கு ஒத்ததாக உள்ளது. மேலும், பொது மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கிறது," என்றார்.

இந்த பிரபல புத்தக விற்பனையானது இலங்கையில் நான்காவது முறையாக இடம்பெறவுள்ளது.

இம்முறை www.bigbadwolfbooks.lk ஒன்லைன் தளத்தின் மூலமாக இடம்பெறுவதுடன், இது கொவிட் சவாலை வெற்றிகரமாக முறியடிக்கின்றது. உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனையான, Big Bad Wolf  புத்தக விற்பனை ‘ஒன்லைனில் முன்னெடுக்கப்படுவது' பற்றிய செய்திகள் சமூக ஊடகங்கள் மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து புத்தக பிரியர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு Big Bad Wolf  விற்பனையைத் தவறவிடுவார்கள் என்று பல உள்நாட்டு புத்தக பிரியர்கள் ஏற்கனவே கவலை கொண்டிருந்தனர்.

Big Bad Wolf  முந்தைய நிகழ்வுகளுக்கு அணுகல் சிக்கல்களால் விஜயம் செய்ய முடியாத வாசகர்களும் இந்தனர். இவ் விற்பனையானது இலங்கையில் ஒன்லைன் நிகழ்வாக இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் அனைவரும் நிம்மதி அடைந்து மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் சமூக ஊடக கருத்துக்கள் கூட அவர்களின் ஆர்வத்தைக் காட்டின. முன்கூட்டிய ஆரம்பத்துக்கான தேவை உருவாகத் தொடங்கியது. இதனால் முடியுமான வரை விரைவில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், ஒன்லைனில் ஓர்டர் செய்யப்பட்ட அனைத்து புத்தகங்களுக்கும் சர்வதேச கப்பல் கட்டணம் அறிவிடப்பட மாட்டாது. மேலும் வியக்கத்தக்க குறைந்த கட்டணத்தில் வீட்டு வாசல்களுக்கே விநியோகிக்கப்படும். ரூபா 8,000 இற்கும் அதிக ஒரே பரிவர்த்தனைக்கு உள்நாட்டு விரைவு அஞ்சல் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படாது.

இந்த புதிய விற்பனை வடிவமானது Big Bad Wolf  குழுவை புதிய செயற்பாடுகளை கொண்டு வரவும், முந்தைய விற்பனையுடன் ஒப்பிடும்போது ரசிகர்களுடன் அதிகம் செயற்பாடுகளில் ஈடுபடவும் உதவியது. இந்த செயற்பாடுகளில் தெரிந்தெடுக்கப்பட்ட புத்தகங்களில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் மற்றும் பல பல் கொள்வனவு டீல்கள் ஆகியவை கிடைக்கின்றன.

Big Bad Wolf Book Sale இன் சமூக வலையமைப்பு பக்கங்களில் கருத்துக்களை பார்வையிடும் போது, புத்தக பிரியர்கள் மேலும் மேலும் புத்தகங்களுக்கு ஏங்குவதையும், உலகின் மிகப் பெரிய புத்தக விற்பனைக்காக பொறுமையை இழந்து ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமையும் புலனாகின்றது. விற்பனை ஒன்லைனில் நடைபெறுகிறது என்பதையும், 24/7 புத்தகங்களின் முழு தெரிவையும் அனைவருக்கும் அணுகலாம் என்பதையும் பலர் உற்சாகமாகக் கொண்டுள்ளனர். ஒன்லைன் விற்பனையின் போது நாளின் எந்த நேரத்திலும் புத்தகங்களை தேட முடியும் என்பதால் இது ஆர்வமுள்ள வாசகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.

புத்தக பிரியர்கள் www.bigbadwolfbooks.lk மூலம் புத்தகங்களை அணுகலாம், மேலும் பிக் பேட் ஓநாய் புத்தக விற்பனை தொடர்பான பிந்திய விபரங்கள் மற்றும் போட்டிகளை Facebook - www.facebook.com/bbwbookssrilanka மூலம் மற்றும் Instagram - www.instagram.com/bigbadwolfbooks_lk மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


Add new comment

Or log in with...